அரசியல் இலங்கை செய்தி

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம்: சத்திய கடதாசி வழங்க தயாராகும் நாமல்!

  • December 22, 2025
  • 0 Comments

“ ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் டொலர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு இதுவே சரியான தருணமாகும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தேவைப்படும் பட்சத்தில் சத்திய கடதாசியை வழங்குவதற்குகூட நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார். “ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் டொலர்களை பதுக்கியுள்ளனர் என தற்போதைய ஆட்சியாளர்களால் அன்று குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது. அதற்கு அரசாங்கத்தக்கு தேவைப்படும் சகல ஒத்துழைப்பை வழங்குவதற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

2033 வரை அவகாசம் வேண்டும்: ஐ.எம்.எவ். ஒப்பந்தத்தில் மாற்றம் கோருகிறார் சஜித்!

  • December 22, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். மாவனல்லை, அரநாயக்க பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, ” 2033 ஆம் ஆண்டில் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறே சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தி இருந்தது. எனினும், அப்போதைய அரசாங்கம் 2028 முதல் கடன் மீள செலுத்தப்படும் என […]

உலகம்

புகுஷிமா பேரழிவிற்குப் பிறகு அணு ஆலையை மீண்டும் திறக்கும் ஜப்பான் -முடிவு இன்று!

  • December 22, 2025
  • 0 Comments

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற புகுஷிமா (Fukushima) பேரழிவிற்குப் பிறகு ஜப்பான்  தனது அணுமின் நிலையத்தை மீளவும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறது. அதற்கமைய  உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு இன்று எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டால் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆலையில் உள்ள ஏழு உலைகளில் முதலாவது உலையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் குறித்து ஐ.நா.மகிழ்ச்சி!

  • December 22, 2025
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவாகவும் முறையாகவும் செயல்பட்டதற்கு இதன்போது ஐ.நா. பிரதிநிதி பாராட்டு தெரிவித்தார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதுபோன்ற பேரனர்த்தங்களின் போது இலங்கைக்கு கிடைத்த சர்வதேச ஒத்துழைப்பின் அளவு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க தனது […]

இலங்கை

அம்பாலாங்கொடையில் தனியார் நிறுவனமொன்றின் மேலாளர் சுட்டுக்கொலை!

  • December 22, 2025
  • 0 Comments

அம்பலாங்கொடையில் இன்று  அதிகாலை  இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்  தனியார் நிறுவனமொன்றின் மேலாளர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல்தாரி இனங்காணப்படவில்லை என்பதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் புயலாக மாறியுள்ள பிரதியமைச்சரின் “குத்தாட்டம்”!

  • December 22, 2025
  • 0 Comments

சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க ஆடிய குத்தாட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பில் சாதகமாகவும், அரசியல் விமர்சன ரீதியாகவும் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன. பேரிடரால் மலையகத்துக்கான ரயில் பாதைகளும் கடுமையாக சேதமடைந்திருந்தன. இந்நிலையில் பதுளை முதல் அம்பேவளை வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டு, சேவை மீள ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 20 ஆம் திகதி சுமார் 23 நாட்களுக்கு பின்னர் உடரட்ட மெனிக்கே ரயில் தனது பயணத்தை மீள ஆரம்பித்தது.இதற்காக விசேட நிகழ்வொன்று […]

இலங்கை உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் திடீர் நீக்கம்: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு

  • December 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” (America First) கொள்கைக்கு முழுமையாக ஒத்துழைக்கும் வகையில் இராஜதந்திரக் கட்டமைப்பை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் (Julie Chung) உட்பட சுமார் 30 நாடுகளின் சிரேஷ்ட தூதர்களைத் திரும்பப் பெற வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஜனவரி மாதத்துடன் இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இவர்களை நீக்கிவிட்டு, ட்ரம்ப்பின் கொள்கைகளை உலகெங்கும் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

திட்வா” புயல் எதிரொலி: இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை இடைநிறுத்த 120 நிபுணர்கள் அதிரடி கோரிக்கை

  • December 22, 2025
  • 0 Comments

“திட்வா” புயலால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளை எதிர்கொள்வதற்காக இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை உடனடியாக இடைநிறுத்துமாறு உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் 120 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz), இந்தியப் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் மற்றும் தோமஸ் பிக்கெட்டி உள்ளிட்ட பல சர்வதேச வல்லுநர்கள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையின் உள்கட்டமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கடன் […]

அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் புது வியூகம்: சஜித், ரணில் விரைவில் நேரடி சந்திப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் விரைவில் நேரடி சந்திப்பு நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து பயணிப்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் வகையிலேயே இதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகளிலும் உள்ள மூத்த உறுப்பினர்களின் தலையீட்டையடுத்தே நேரடி சந்திப்புக்குரிய ஏற்பாடு இடம்பெற்றுவருவதாக தெரியவருகின்றது. இணைந்து பயணிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இரு கட்சிகளில் இருந்தும் பேச்சு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அக்குழுக்கள் சந்தித்து […]

செய்தி விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

  • December 21, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அந்த வகையில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 371 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 87.2 […]