அரசியல் இலங்கை செய்தி

அரசியல் புயலாக மாறியுள்ள பிரதியமைச்சரின் “குத்தாட்டம்”!

சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க ஆடிய குத்தாட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இது தொடர்பில் சாதகமாகவும், அரசியல் விமர்சன ரீதியாகவும் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.
பேரிடரால் மலையகத்துக்கான ரயில் பாதைகளும் கடுமையாக சேதமடைந்திருந்தன.

இந்நிலையில் பதுளை முதல் அம்பேவளை வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டு, சேவை மீள ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 20 ஆம் திகதி சுமார் 23 நாட்களுக்கு பின்னர் உடரட்ட மெனிக்கே ரயில் தனது பயணத்தை மீள ஆரம்பித்தது.இதற்காக விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது வெளிநாட்டு பயணிகளுடன் இணைந்து ஆட்டம் ஆடி, பிரதி அமைச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“ மலையக ரயில் மார்க்கம்தான் சுற்றுலாத்துறையின் உயிர்;நாடி. அது மீளமைக்கப்பட்ட மகிழச்சியையே அவர் வெளிப்படுத்தினார்.” என ஒரு சிலர் பதிவிட்டுள்ளனர்.

பேரிடருக்கு மத்தியிலும் அவரால் எவ்வாறு இப்படி செயல்பட முடிகின்றது என மேலும் சிலர் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் தற்போது அரசியல் களத்திலும் பேசப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, விமர்சன ரீதியில் கருத்து வெளியிட்டுள்ளார்.

“ நாட்டு மக்களுக்கு நகைச்சுவைகளையே தேசிய மக்கள் சக்தி விநியோகித்துவருகின்றது.

இந்நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில்தான் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்படியானால் ஐக்கிய தேசியக் கட்சியின் இன்னும் ஆடிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

ஆனால் ரயில் பாதையை மறுசீரமைத்துவிட்டு இவர்கள் இப்படி ஆடுகின்றனர்.” என்றார் நளின் பண்டார் எம்.பி.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை