இலங்கை செய்தி விளையாட்டு

மண்டைதீவு கிரிக்கெட் மைதானத் திட்டம் சட்டவிரோதமானது: ஜனாதிபதிக்கு WNPS அவசர கடிதம்

  • December 22, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம் சட்டவிரோதமானது என இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் (WNPS) எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அச்சங்கம் அனுப்பியுள்ள விசேட கடிதத்தில், குறித்த திட்டம் அமையவுள்ள பகுதியில் கண்டல் தாவரங்கள், கடல் புற்கள் மற்றும் உப்பளங்கள் போன்ற முக்கியமான சூழலியல் மண்டலங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறையான அனுமதிகளைப் பெறாமல், தவறான தகவல்களை வழங்கி […]

ஐரோப்பா செய்தி

UKவில் கேள்விக்குறியாகும் சிறுபான்மை மக்களின் வாழ்க்கை முறை!

  • December 22, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  சிறுபான்மை இனக் குடிமக்களின் வாழ்க்கை கடினமாகி வருவதாக புதிய சமத்துவ கண்காணிப்புக் குழுவின் தலைவரான டாக்டர் மேரி-ஆன் ஸ்டீபன்சன் (Dr Mary-Ann Stephenso)  தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் சமீபகாலமாக புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் அவரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டிலிருந்து (ECHR) இங்கிலாந்து வெளியேறுவது தவறான கொள்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மனித உரிமைகள் வழக்குகள் குறித்த தவறான ஊடக செய்திகளையும் அவர் விமர்சித்துள்ளார். நாடுகடத்தலை […]

உலகம் செய்தி

மேற்கத்தேய நாடுகளில் உள்ள யூத மக்களுக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல்!

  • December 22, 2025
  • 0 Comments

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள யூத சமூகங்களை இஸ்ரேலுக்கு குடிப்பெயருமாறு  இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் (Gideon Saar) அழைப்பு விடுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார். யூதர்கள் “உலகம் முழுவதும் வேட்டையாடப்படுகிறார்கள்” என்றும், குடும்பங்கள் ஏன் இதுபோன்ற சூழ்நிலையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யூத எதிர்ப்பு தாக்குதல்களின் அதிகரிப்பை காசாவில் உள்ள […]

உலகம் ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம் : நாய் வளர்ப்பு மற்றும் வேட்டைக்குத் தடை

  • December 22, 2025
  • 0 Comments

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும் ‘பப்பி பார்மிங்’ (Puppy Farming) முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளதுடன், நாய்களுக்கான மின்சார அதிர்வு கழுத்துப்பட்டை (Electric Shock Collars) பயன்பாட்டைத் தடை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. மேலும், நரி வேட்டைக்கான போர்வையாகப் பயன்படுத்தப்படும் ‘டிரெயில் ஹண்டிங்’ (Trail Hunting) முறைக்கும், வனவிலங்குகளைக் காயப்படுத்தும் பொறி நுட்பங்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது. விவசாயத் […]

இலங்கை செய்தி

மோடியின் சிறப்பு தூதுவராகவே ஜெய்சங்கர் வருகிறார்: அநுரவுடன் நாளை சந்திப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்   (22) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை இன்று (22) வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு “ ஒப்பரேஷன் சாகர் பந்து” திட்டம் ஊடாக பல்வேறு உதவிகளை […]

உலகம்

வங்கதேசத்தில் மற்றுமொரு மாணவரும் சுட்டுப் படுகொலை!

  • December 22, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வழியமைத்த மாணவர் தலைவர் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டத்தை தொடர்ந்து மற்றுமொரு மாணவ தலைவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) மூத்த தலைவர் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று காலை 11:45 மணியளவில் நகரின் சோனாடங்கா (Sonadanga)பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்ததாக வங்கதேச நாளிதழ் புரோதோம் அலோ தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் செய்தி

இராணுவத் தளபதி படுகொலை: உக்ரைன் உளவுத்துறை மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு

  • December 22, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் தென்மேற்கு மாஸ்கோவில் இன்று காலை நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், அந்நாட்டின் உயர்மட்ட இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) கொல்லப்பட்டுள்ளார். ரஷ்ய ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சிப் பிரிவின் தலைவராக இருந்த இவரது காரின் அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள், காலை 7 மணியளவில் வெடித்ததில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் உக்ரைனிய உளவு அமைப்புகள் இருக்கலாம் என்ற கோணத்தில் ரஷ்யாவின் புலனாய்வுக் குழு விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த […]

உலகம் ஐரோப்பா செய்தி

நத்தார் தினத்தில் கடும் குளிர் மற்றும் உறைபனி: வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள புதிய தகவல்

  • December 22, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த ஆண்டு நத்தார் தினத்தில் பரவலான பனிப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்று காரணமாக இந்த வாரம் வெப்பநிலை பெருமளவு குறைந்தாலும், வளிமண்டலத்தில் நிலவும் உயர் அழுத்தம் காரணமாக மேகமூட்டமான வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் சில உயரமான மலைப்பகுதிகளில் லேசான பனிப்பொழிவு காணப்படலாம். தொழில்நுட்ப ரீதியாக நத்தார் தினத்தின் 24 மணிநேரத்தில் ஏதாவது ஒரு […]

அரசியல் இலங்கை செய்தி

திஸ்ஸ விகாரை சர்ச்சை: கொழும்பு தமிழர்களை அழைக்கிறது மஹிந்த அணி!

  • December 22, 2025
  • 0 Comments

“ யாழ்.தையிட்டி விகாரை விடயத்தில் பௌத்தர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. இதற்கு எதிராக கொழும்பில் வாழும் இந்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (22) நடந்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இலங்கை பௌத்த நாடென்பதை வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். திஸ்ஸ விகாரையில் பௌத்தர்களுக்கு வழிபாடு நடத்துவதற்கு […]

உலகம் செய்தி

“எந்த விலை கொடுத்தேனும் ஜப்பானின் முயற்சியை தடுப்போம்” – கொந்தளிக்கும் வடகொரியா!

  • December 22, 2025
  • 0 Comments

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஜப்பானின் லட்சியத்தை “எந்த விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும்” என்று வட கொரியா கூறியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி பியோங்யாங் மாநில ஊடகம்   செய்தி வெளியிட்டுள்ளது. “ஜப்பானின் அணு ஆயுத முயற்சியை எந்த விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும், ஏனெனில் அது மனிதகுலத்திற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்று வட கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஜப்பான் ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குனர் குறித்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் […]