இந்தியா உலகம் செய்தி

முடிவுக்கு வந்தது எச்-1பி குலுக்கல் முறை

  • December 25, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த எச்-1பி விசா குலுக்கல் முறையை (Lottery System) ரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக ஊதியம் மற்றும் அதிகத் திறமை கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய சட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் இறுதி செய்துள்ளது. இந்த புதிய ‘வெயிட்டட் அப்ரோச்’ (Weighted Approach) நடைமுறை, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 முதல் அமலுக்கு வருகிறது. புதிய விதிகளின்படி, அதிக ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு விசா கிடைக்க நான்கு மடங்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அவுஸ்திரேலியாவில் சைக்கிள் விற்பனை கடும் சரிவு – இ-பைக்குகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

  • December 25, 2025
  • 0 Comments

கொரோனா தொற்றுநோய் காலத்தில் அவுஸ்திரேலியாவில் பெரும் வளர்ச்சியைக் கண்ட சைக்கிள் ஓட்டுதல் துறை, தற்போது கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் சந்தையில் தேங்கிக் கிடக்கும் அதிகப்படியான கையிருப்பு காரணமாக, இந்த ஆண்டு விற்பனை எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் மிதிவண்டிகளுக்கான தேவை வேகமாகக் குறைந்துள்ளது. இதனால் ’99 பைக்குகள்’ போன்ற முன்னணி நிறுவனங்கள் கூடத் தமது வணிக வலையமைப்பை விரிவுபடுத்த […]

அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் கொழும்பில் குடியேறினார் மஹிந்த! பின்னணி என்ன?

  • December 25, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மீண்டும் கொழும்பில் (Colombo) குடியேறியுள்ளார் என தெரியவருகின்றது. நுகேகொடை (Nugegoda) , மிரியான (Mirihana) பகுதியிலேயே அவர் குடியேறியுள்ளார் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் நடவடிக்கை, இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் மருத்துவ சிகிச்சை என்பவற்றைக் கருதியே மஹிந்த மீண்டும் கொழும்பு வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. கொழும்பு, 7 விஜேராம மாவத்தையிலுள்ள (Wijerama Mawatha) அரசாங்க உத்தியோகப்பூர்வ வதிவிடத்திலேயே மஹிந்த ராஜபக்ச தங்கி வந்தார். எனினும், முன்னாள் […]

இலங்கை செய்தி

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பயணிகள் படுகாயம்

  • December 25, 2025
  • 0 Comments

திருகோணமலை – சேருநுவர, மகிந்தபுர சந்தி பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற சமயம் பேருந்தில் 21 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுவதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக சேருநுவர மற்றும் முத்தூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உலகம் செய்தி

நாடு கடத்தப்படவுள்ளவர்களை தங்க வைப்பதற்கு இடம் தேடும் ட்ரம்ப் நிர்வாகம்!

  • December 25, 2025
  • 0 Comments

அமெரிக்கா முழுவதும் குறைந்தது ஏழு பெரிய அளவிலான கிடங்குகளை கையகப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. குடியேற்ற முறையை ஒழுங்கமைக்கும் வகையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோருக்கான தங்குமிட வசதிகளை உருவாக்க இந்த கிடங்குகளை பயன்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வொஷிங்டன் போஸ்ட்டால் (Washington Post) பெறப்பட்ட வரைவு கோரிக்கை திட்டத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி  குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை, 5,000 முதல் 10,000 பேர் வரை தங்கக்கூடிய குறைந்தது ஏழு பெரிய தொழில்துறை கிடங்குகளை […]

உலகம் ஐரோப்பா செய்தி

வாழ்க்கை ஒரு யாத்திரை” – கிறிஸ்துமஸ் செய்தியில் நம்பிக்கையைப் பகிரும் பிரித்தானிய மன்னர்

  • December 25, 2025
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் 2025-ஆம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் செய்தி, இன்று மதியம் 3 மணிக்கு உலகெங்கும் ஒளிபரப்பாகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் வரலாற்றுச் சிறப்புமிக்க லேடி சேப்பலில் (Lady Chapel) இருந்து இந்த உரை வழங்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சை வெற்றிகரமாகக் குறைக்கப்பட்ட பிறகு, மன்னர் வழங்கும் முதல் கிறிஸ்துமஸ் உரை இது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையை ஒரு ‘யாத்திரை’ (Pilgrimage) என வர்ணித்துள்ள மன்னர், இரண்டாம் உலகப் போரின் 80-வது ஆண்டை முன்னிட்டு போர் வீரர்களின் தியாகங்களையும் […]

அரசியல் இலங்கை செய்தி

சிறு கட்சிகளுக்கு ரவி வலை!

  • December 25, 2025
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (24) ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) பங்கேற்றிருந்தார். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJP) என்பவற்றை ஒன்றிணைப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சி தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க மேலும் […]

ஐரோப்பா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு – உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடித்துக்கொண்ட கைதிகள்!

  • December 25, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இருவர் தற்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 48 நாட்கள் உணவை மறுத்த பிறகு, குசெர் சுஹ்ரா (Qesser Zuhrah) மற்றும் அமு கிப் ( Amu Gib) ஆகிய இருவருமே மேற்படி போராட்டத்தை கைவிட்டுள்ளனர். கொள்ளை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள குறித்த இருவரும் ஏனைய ஆறு கைதிகளுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மேற்படி இருவரும் சோர்வு மற்றும் வயிற்று வலி ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்ட பிறகு […]

இந்தியா

இந்தியாவில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 17 பேர் உடல் கருகி பலி!

  • December 25, 2025
  • 0 Comments

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில்  சித்ரதுர்காவில் (Chitradurga) உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ஸ்லீப்பர் பேருந்து ஒன்று லொறியுடன் மோதி தீப்பிடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்தின் எரிந்த எச்சங்களிலிருந்து உயிர் பிழைத்தவர்களை வெளியே எடுக்கவும், உடல்களை மீட்கவும் மீட்புக் குழுக்கள் போராடி வருகின்றனர். தீக்காயங்களுக்கு உள்ளான சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்வதாலும், காயமடைந்த பயணிகள் சிகிச்சையில் இருப்பதாலும் இறப்பு […]

இந்தியா

இந்திய மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் செயற்கை வைரம்!

  • December 25, 2025
  • 0 Comments

இந்தியாவில் இயற்கையான வைரக்கற்களை ஒத்த செயற்கை வைரக்கற்களை உற்பத்தி செய்வது சமீபகாலமாக வளர்ச்சியடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறை முந்தைய ஆண்டுகளை விட 15 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சியடையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் வைர உற்பத்தியை பொருத்தவரை இந்தியா 90 விழுக்காடு பங்கு வகிக்கின்றது. இருப்பினும் இதற்கான செலவு அதிகம். ஆகவே தற்போது வியாபாரிகள் செயற்கை வைரத்தை கொண்டு இலாபம் ஈட்டும் நடவடிக்கையை முன்னெடுத்து […]