#DreamWarriorPictures #SaiAbhyankar #CourtroomDrama #SocialJustice #TamilCinema2026 பொழுதுபோக்கு

சூர்யா 45: ‘கருப்பு’ படத்தில் வக்கீலாக சூர்யா – திரிஷா!

  • December 28, 2025
  • 0 Comments

சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படமான ‘கருப்பு’ (Karuppu) படத்திலும் நடித்து வருகிறார். இது ஒரு சமூக நீதி சார்ந்த கோர்ட் ரூம் டிராமா. இதில் சூர்யா மற்றும் திரிஷா இருவரும் வக்கீல்களாக நடிக்கின்றனர்.   இப்படத்திற்கு ‘கட்சி சேரா’ புகழ் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று வெளியானது. படம் 2026 ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து விசாரணை

  • December 28, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு இவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 இல் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மாகந்துர மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து முறையான விளக்கமளிக்கத் தவறிய நிலையிலேயே கடந்த 26 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். தற்போது 72 மணிநேர தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் டக்ளஸ் […]

இலங்கை செய்தி

“டித்வா” புயல் நிவாரண நிதிக்கு பொகவந்தலாவை கொட்டியகல மக்கள் நன்கொடை வழங்கிவைப்பு

  • December 28, 2025
  • 0 Comments

நாட்டை உலுக்கிய ‘டித்வா’ சூறாவளி தாக்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பொகவந்தலாவை கொட்டியகல தோட்டத் தொழிலாளர்கள் முன்மாதிரியான மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தினசரி ஊதியம் பெறும் 1,350 தோட்டத் தொழிலாளர்கள், வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை தியாகம் செய்து, இளைஞர் சமூகத்தின் பங்களிப்புடன் திரட்டப்பட்ட ரூ. 1,08,000 நிதியினை அரசாங்கத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இலங்கை வங்கியின் பேரிடர் நிவாரணக் கணக்கில் இந்தத் தொகை […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சில நாடுகள் மீது விசா தடை – புதிய நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானியா!

  • December 28, 2025
  • 0 Comments

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த பிரித்தானிய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ருவாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகள் சட்டவிரோத குடியேறிகளை மீள பெறும் ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை. இந்நிலையில் ஒப்பந்தத்திற்கு இணங்காத நாடுகள் மீது விசா தடை விதிக்கப்போவதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மஹ்மூத்தின் இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து அங்கோலா மற்றும் நமீபியா ஆகிய இரு நாடுகளும் […]

இலங்கை செய்தி

“அலையோடு உறவாடு”: காங்கேசன்துறை கடற்கரையில் கோலாகலமாகத் தொடங்கிய உணவுத் திருவிழா

  • December 28, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்கரையில் “அலையோடு உறவாடு” எனும் மகுட வாசகத்துடன் மாபெரும் உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவை இணைந்து இந்த விசேட நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளன. வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இன்று காலை ஆரம்பமான இந்தத் திருவிழா, இரவு வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதில் எமது மண்ணின் பாரம்பரிய உணவுகள், உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விற்பனைச் சந்தை மற்றும் […]

இந்தியா இலங்கை செய்தி

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய 3 இந்திய மீனவர்கள் கைது

  • December 28, 2025
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக மேலும் 3 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 1 இழுவை மடி படகுடன் இந்த மீனவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். முறையான அனுமதிப்பத்திரமின்றி இலங்கை எல்லைக்குள் நுழைந்தது மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இவர்களையும் […]

இலங்கை செய்தி

இரத்தினபுரியில் தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; ஒருவர் கைது

  • December 28, 2025
  • 0 Comments

இரத்தினபுரி – அயகம, சமருகம பகுதியில் அயலவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சமருகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவருக்கும் அவரது அயலவர் ஒருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் […]

இலங்கை

புயலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு படையெடுக்கும் மக்கள்!! பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம்!

  • December 28, 2025
  • 0 Comments

நாட்டை உலுக்கிய சமீபத்திய புயல் நிலமையை தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை மீளவும் புத்துயிர் பெற்றுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.25 மில்லியனை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தித்வா சூறாவளியின் தாக்கத்தால் டிசம்பர் முதல் இரண்டு வாரங்களில் மந்தநிலை இருந்தபோதிலும் தற்போது மீளவும் சுற்றுலா துறை வளர்ச்சி பாதையில் பயணிப்பதாக புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஜனவரி முதல் நவம்பர் வரையிலான ஆண்டின் ஒட்டுமொத்த வருகை 2,103,593 ஆக […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் ஆதரவு இல்லங்களில் தொடரும் மரணங்கள்: புதிய சட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை

  • December 28, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் பாதுகாப்பு மற்றும் முறையான வசதிகள் இல்லாத ‘ஆதரவு இல்லங்களில்’ தங்கியிருக்கும் எளிய மக்கள் உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. இத்தகைய இல்லங்களை ஒழுங்குமுறைப்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும், அது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படாததே இந்த நிலைக்குக் காரணம் எனப் புகார் எழுந்துள்ளது. சிறையிலிருந்து விடுதலையானவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக ஒதுக்கப்படும் இந்த இல்லங்களைச் சில நில உரிமையாளர்கள் முறைகேடாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அங்கு போதிய பராமரிப்பு […]

இந்தியா செய்தி

டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு!

  • December 28, 2025
  • 0 Comments

டெல்லியின் காற்றின் தரக்குறியீடு இன்று மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது. காற்றின் குறயீடானது 391 என்ற நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நகர் முழுவதும் புகைமூட்டம் பரவி காணப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டெல்லியில் உள்ள 40 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில், 20 நிலையங்கள் மோசமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) டெல்லியில் காலையில் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில் விமான […]