ஐரோப்பா செய்தி

கிறிஸ்துமஸ் காலத்தில் அர்மாக் தேவாலயங்களில் கொள்ளை

  • December 28, 2025
  • 0 Comments

  கிறிஸ்துமஸ் நாளில், வடக்கு அயர்லாந்தின் கவுண்டி அர்மாக்(Armagh), நியூடவுன்ஹாமில்டனில் உள்ள இரண்டு தேவாலயங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. டிசம்பர் 25 அன்று அதிகாலை 3 மணி முதல் டிசம்பர் 26 வரை டண்டல்க் (Dundalk)தெரு மற்றும் காசில்பிளேனி (Castleblayney)தெருவில் உள்ள தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவங்களில் மின்னணு ஸ்பீக்கர்கள் மற்றும் சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். தகவல் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

மக்கள் 100 வயதை கடந்து வாழ்வதற்கான இரகசியம்! ஆய்வில் வெளியான தகவல்!

  • December 28, 2025
  • 0 Comments

உலகில் ஒரு சில நாடுகளில் வாழும் மக்கள் நூறுவயதை கடந்து வாழ்வது பலருக்கும் வியப்பை அளித்திருக்கும்.  குறிப்பாக ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வாழும் மக்கள் இலகுவாக நூறுவயதையும் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒருவரின் உடல், உள ஆரோக்கியம் நீண்டகால உயிர்வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆய்வு மனிதன் நீண்டகாலம் வாழ்வதற்கு மரபணு மூலக்கூறுகளும் முக்கிய காரணமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. […]

உலகம் செய்தி

காபூலில் ஆயிரக்கணக்கானோர் ஆப்கானிஸ்தானின் தேசிய புஸ்காஷி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பு

  • December 28, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய குதிரையேற்ற விளையாட்டான புஸ்காஷியின் (buzkashi)வருடாந்திர தேசிய சாம்பியன்ஷிப் போட்டி காபூலின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்றது. இந்த போட்டியை காண நாட்டின் பல பகுதிகளிலிருந்து குதிரை வீரர்களும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் திரண்டனர். உயர்மட்ட தலிபான் அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புஸ்காஷி என்பது ஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டு. இதில் குதிரை வீரர்கள் தோல் போர்த்தப்பட்ட நிறையுடைய மூட்டையை எடுத்துச் சென்று கோல் கோட்டைக் கடக்க வேண்டும். போட்டி முழுவதும் கடும் உடல் […]

ஐரோப்பா செய்தி

பேரழிவின் விளிம்பிலிருந்து மீண்டெழுந்த இங்கிலாந்தின் பார்ன்ஸ்லி நகரம்

  • December 28, 2025
  • 0 Comments

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் பார்ன்ஸ்லி (Barnsley) நகரம் தற்போது மறுமலர்ச்சி அடைந்துள்ளது 30 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கரி சுரங்கத் தொழில் சரிந்ததைத் தொடர்ந்து பார்ன்ஸ்லி (Barnsley) நகரத்திர் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான வேலை இழந்ததால் நகரம் சரிவின் விளிம்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 9 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பார்ன்ஸ்லியை வந்தடைந்துள்ளனர். இது யார்க் போன்ற முக்கிய நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சியென தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்ன்ஸ்லி 1086 ஆம் ஆண்டு டோம்ஸ்டே புத்தகத்தில் […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டன் கடற்பகுதியில் ரஷ்ய உளவுக் கப்பல் : நாசவேலைக்கான திட்டமா?

  • December 28, 2025
  • 0 Comments

பிரித்தானியாவச்  சுற்றியுள்ள முக்கியமான கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவு கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கப்பல் பிரித்தானியாவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பின் உள்கட்டமைப்பை வரைப்படமாக திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரித்தானியாவையும், அயர்லாந்தையும் இணைக்கும் எரிவாயு குழாய்த்திட்டத்தை ஆய்வு செய்தபோது, ரஷ்யாவிற்கு சொந்தமானது என நம்பப்படும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் செயற்பாட்டை புகைப்படம் எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் சொந்த நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட நாசவேலை நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

சான் பிரான்சிஸ்கோ நகரையே ஸ்தம்பிக்கவைத்த வேமோ ரோபோடாக்சிகள்- கரணம் இதுவா?

  • December 28, 2025
  • 0 Comments

டிசம்பர் 20, 2025 அன்று சான் பிரான்சிஸ்கோ (SAN FRANCISCO) நகரின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் மின்தடை. இது அந்த நகரின் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பைச் சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது. அந்த நகரில் ஒரு துணை மின்நிலையத்தில் (PG&E substation) ஏற்பட்ட தீ விபத்தால் நகரின் மூன்றில் ஒரு பகுதி இருளில் மூழ்கியது. சுமார் 130,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. மேலும் இந்த மின்தடையால் நூற்றுக்கணக்கான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகள் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

  • December 28, 2025
  • 0 Comments

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் முன்னிலையில் அவர் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று, 2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் கடந்த 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வு […]

ஐரோப்பா

நோர்டிக் நாடுகளில் வீசும் புயல் – சுவீடனில் மின்துண்டிப்பு!!

  • December 28, 2025
  • 0 Comments

நோர்டிக் நாடுகளில் வீசிய சக்திவாய்ந்த குளிர்காலப் புயலால் சுவீடனில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஜோஹன்னஸ் (Johannes) புயல் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்குப் பகுதியின் பெரும்பகுதியில்  பலத்த காற்று வீசும் என ஸ்வீடிஷ் (Swedish) வானிலை மற்றும் நீர்நிலை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்படி புயல் நிலைமை காரணமாக ஸ்வீடன், நோர்வே மற்றும் பின்லாந்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்வீடனில், 40,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மின் தடையால் […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தோஹாவிலிருந்து வந்த விமானத்திற்கு குண்டு மிரட்டல்

  • December 28, 2025
  • 0 Comments

கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து இலங்கை வந்த விமானம் ஒன்றிற்கு விடுக்கப்பட்ட போலி குண்டு மிரட்டல் காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (டிசம்பர் 28) அதிகாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தோஹா ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 1.44 மணியளவில் புறப்பட்ட குறித்த விமானத்தில், பயணிகளாக மாறுவேடமிட்டுள்ள நான்கு பேர் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக விமான நிலைய மின்னணு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு மின்னஞ்சல் ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் […]

ஐரோப்பா செய்தி

போர் களமா? பொருளாதார களமா? : புதிய பில்லியனர்களை உருவாக்கிய புட்டின்!

  • December 28, 2025
  • 0 Comments

​​ரஷ்யாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது. மேற்கத்தேய நாடுகளின் தடைகள், சொத்து முடக்கம் என்பன வெறும் கண்துடைப்பாகவே காணப்படுவதை இது உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையே சமீபத்திய போர் நடவடிக்கை காரணமாக  மேற்கத்தேய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதுடன்,   சொத்துக்களை முடக்கியுள்ளனர். இவ்வாறான ஒரு கடினமான சூழ்நிலையிலும், ரஷ்யா தனது பொருளாதாரத்தை சிறப்பாக வழிநடத்தி வருவதை இந்த புதிய தரவு சுட்டிக்காட்டியுள்ளது. பிப்ரவரி 24, 2022 அன்று […]