கிரீஸ் நாட்டில் மே 21ம் தேதி தேசிய தேர்தல் : பிரதமர் கிரியாகோஸ் அறிவிப்பே
கிரீஸ் நாட்டில் மே 21ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அறிவித்துள்ளார். பழமைவாத அரசாங்கத்தின் நான்காண்டு பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. நாட்டிற்கும் அதன் குடிமக்களுக்கும் தெளிவான எல்லைகள் தேவை. ஆரம்பத்தில் இருந்தே நான் உறுதியளித்தது போல் தேசிய தேர்தல்கள் நான்கு ஆண்டு கால முடிவில் நடத்தப்படும் என்று மிட்சோடாகிஸ் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரி சிரிசா கட்சியை விட மிட்சோடாகிஸின் புதிய ஜனநாயகக் கட்சி முன்னணியில் […]













