பொழுதுபோக்கு

மறக்க முடியுமா “பெட்ட ராப்” கொண்டாட்டத்தை!! மீண்டும் வருகின்றது… கொண்டாட தயாரா???

  • June 1, 2023
  • 0 Comments

டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘பேட்ட ராப்’ திரைப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் ‘பேட்ட ராப்’ என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் […]

இலங்கை

நிதிக் கொள்கையில் தளர்வுகளை மேற்கொள்ள மத்திய வங்கி நடவடிக்கை!

  • June 1, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி அதன் நிதிக் கொள்கையில் தளர்வுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதற்கமைய நிலையான வைப்புக்களுக்கான வட்டியை 13 சதவீதமாகவும்,  நிலையான கடனுக்கான வட்டியை 14 சதவீதமாகவும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி நிதி சபையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பணவீக்கம் குறையும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளதுடன்,  நாட்டின் பணவீக்கம் கணித்த காலத்தை விட விரைவில் ஒற்றை இலக்கத்தை எட்டும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையிலேயே […]

இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுத்தியாக அதிகரிப்பு!

  • June 1, 2023
  • 0 Comments

நாட்டில் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில்  தினசரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை  கடந்த வாரத்தை விட 24 மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 39028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த […]

ஆசியா

சீனாவிற்கு எதிரா அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் – அதிபர் ஜின்பிங்

  • June 1, 2023
  • 0 Comments

தென் சீன கடல், தைவான் போன்ற சர்ச்சைக்குரிய பிராந்தியங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இது சமீப காலமாக மோசமான சூழலை நோக்கி சென்று வருகிறது. உக்ரைன் போர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் சீனாவை பகைத்து வருகின்றன. உக்ரைனில் இருந்து ரஷ்யாவை வெளியேறுமாறு சீனா அறிவுறுத்தாவிடில், சீனாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான உறவு மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் சீனாவின் தேசிய […]

ஐரோப்பா

ஐரோப்பாவின் பணவீக்கம் பற்றிய தற்போதைய நிலவரம்!

  • June 1, 2023
  • 0 Comments

ஐரோப்பாவின் பணவீக்கம் 6.1% ஆக குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் 20 நாடுகளில் மே மாதத்தின் வருடாந்திர பணவீக்கத்தின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 7% ஆக உள்ளது  என  ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் நிறுவனமான யூரோஸ்டாட்  தெரிவித்துள்ளது. ஆனால், அதிருப்தியடைந்த நுகர்வோர், கடைகளில் உள்ள விலைக் குறிகளில், பணவீக்கத்தின் இயல்பான அளவைக் காண்பதற்கு பல மாதங்கள் ஆகும் என்று பொரளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

வட அமெரிக்கா

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த 700 மாணவர்கள் விவகாரத்தில் ஏற்பட்டுள் திருப்பம்

  • June 1, 2023
  • 0 Comments

மோசடி ஒன்றில் சிக்கி, கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருந்த 700 இந்திய மாணவர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி, கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள். இந்த மாணவர்கள், 2018 -19 காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் படிப்பை முடித்து, […]

உலகம்

உலகின் முதல்நிலை செல்வந்தராக எலான் மஸ்க் தெரிவு!

  • June 1, 2023
  • 0 Comments

எலோன் மஸ்க் உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்,   உலகின் 500 பணக்காரர்களின் தினசரி தரவரிசையை வெளியிட்டது. இதன் மதிப்பீட்டின் படி,  ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரும்,  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸக், $192 பில்லியன்  சொத்துமதிப்புடன்  முதலிடத்தை பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இவருக்கு அடுத்தப்படியாக  187 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆடம்பரப் பொருட்கள் நிறுவனமான LVMH இன் தலைமை நிர்வாக அதிகாரி  பிரெஞ்சு பில்லியனர் பெர்னார்ட் அர்னால்ட் […]

இந்தியா

வாக்குவாதம் முற்றியதால் மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை! (வீடியோ)

  • June 1, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் குஜராத்தில் பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (45). இவரது மனைவி ரேகா, சந்தா. கடந்த 18ம் திகதி அன்று இரவு, ராமானுஜ் சாஹூவுக்கும் அவரது மகள் சந்தாவுக்கு இடையே மொட்டை மாடியில் தூங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த ராமானுஜ் வீட்டில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து மகளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சந்தா […]

ஐரோப்பா

அங்காராவிற்கு செல்லும் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் : ஸ்வீடனுக்கு சாதகமாக அமையுமா?

  • June 1, 2023
  • 0 Comments

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அங்காராவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்காலத்தில் ஸ்வீடனை நேட்டோவின் உறுப்பினராக்குவது குறித்து விவாதிப்பதற்காக அவருடைய இந்த விஜயம் அமைந்துள்ளதாக  கூறப்படுகிறது. துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுக்கு நேட்டோவின் அனைத்து நலன்களுக்காகவும் ஸ்வீடன் குழுவில் சேர வேண்டும் என்று ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் செய்தி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. “நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிராக மாஸ்கோவின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என்பதை  அனைத்து நட்பு நாடுகளும் ஒப்புக்கொள்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். கடந்த வாரம் […]

இலங்கை

மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கை : பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்!

  • June 1, 2023
  • 0 Comments

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி  மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி  ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக பதிவாகி இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 30.6 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம்  ஏப்ரலில் 21.5 சதவீதமாக குறைந்துள்ளது.