பொழுதுபோக்கு

மறக்க முடியுமா “பெட்ட ராப்” கொண்டாட்டத்தை!! மீண்டும் வருகின்றது… கொண்டாட தயாரா???

டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘பேட்ட ராப்’ திரைப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார்.

நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் ‘பேட்ட ராப்’ என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

வருகிற ஜூன் 15ந் தேதி முதல் புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

இதற்கேற்ற வகையில் “பாட்டு, அடி, ஆட்டம் – ரிபீட்” என்ற சுவாரசியமான டேக்லைன் இப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. பிரபுதேவாவை அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிடித்த வகையில் இப்படம் காட்டும் என்று படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

கதை மற்றும் திரைக்கதையை டினில் பிகே எழுதியுள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் இத்திரைப்படம் படமாக்கப்படவுள்ளது. புதுச்சேரி மற்றும் சென்னையில் முக்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட உள்ளன.

டி இமான் இசையமைக்க, ஐந்துக்கும் அதிகமான பாடல்களோடு வண்ணமயமாக ‘பேட்ட ராப்’ உருவாகிறது. படத்தொகுப்பாளராக சான் லோகேஷ் மற்றும் கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் பணியாற்றுகின்றனர். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content