அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் கொண்ட வான்பரப்பில் நுழைந்த விமானம் விபத்துக்குள்ளாகியது – நால்வர் பலி!
அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டிசியில் கட்டுப்பாடுகள் கொண்ட வான்பரப்பில் பறந்த தனியார் விமானமொன்றை போர் அமெரிக்கப் போர் விமானங்கள் துரத்திச் சென்ற நிலையில், குறித்த தனியார் விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஸ்னா ரக விமானமொன்று வேர்ஜீனியா மாநிலத்தில் இவ்வாறு வீழ்ந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது. டென்னஸி மாநிலத்தின் எலீஸாபெத்டவுன் நகரிலிருந்து நியூயோர்க் நகரின் லோங் ஐலண்ட் பிராந்தியத்தை நோக்கி புறப்பட்ட குறித்த விமானம், தலைநகர் வொஷிங்டன் டிசியில் மிகுந்த […]













