பொழுதுபோக்கு

ஹன்சிகா மோத்வானி குறித்து கருத்து தெரிவித்த ரோபோ ஷங்கர்! மன்னிப்பு கோரிய படக்குழு

நடிகை ஹன்சிகா மோத்வானி, ஆதி பினிசெட்டியுடன் இணைந்து தனது அடுத்த படமான ‘பார்ட்னர்’ ரிலீசுக்கு தயாராகி வருகிறார். மனோஜ் தாமோதரன் இயக்கும் இப்படத்தில் யோகி பாபு, ரோபோ சங்கர், பால்க் லால்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஜூலை 3ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஹன்சிகா மோத்வானி குறித்து ரோபோ சங்கர் கூறிய கருத்து நெட்டிசன்களை கொதிப்படைய செய்துள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானியின் காலைத் தொட வேண்டிய ஒரு திரைப்படக் காட்சியைப் பற்றி […]

செய்தி

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் முதல் தடவையாக நடத்தப்பட்ட மன்னார் பிறிமியர் லீக்

  • July 4, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் மன்னார் பிறிமியர் லீக்(MPL) என்ற சுற்றுப்போட்டி கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக நடத்தப்பட்டது. குறித்த போட்டியின் 2வது சீசன் (SEASON-02 )நேற்று (3) செவ்வாய்க்கிழமை மாலை மின்னொளியில் ஆரம்பமானது. குறித்த சுற்றுப்போட்டியில் 12 உதைபந்தாட்ட கழகங்களை சேர்ந்த 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.மன்னார் மாவட்ட வீரர்கள் தேசியத்திலும்,சர்வதேச மட்டத்திலும் தமது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக அச் சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வாக நேற்று திங்கட்கிழமை(3) மாலை மன்னார் […]

இலங்கை

இன்றைய மாற்று விகிதங்கள்! இலங்கை மத்திய வங்கி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூலை 04) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 314.98 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 299.87 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வளைகுடா நாணயங்கள் உட்பட பிற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.

அரசியல் இலங்கை

இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் கட்ட சசாதகமான பதில் கிடைத்தது

  • July 4, 2023
  • 0 Comments

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார். BOI ஆடைகள் பூங்கா குறித்தும் , திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் […]

இந்தியா

ஆன்மீக தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது! பிரதமர் மோடி

நாட்டில் ஆன்மீக மையங்கள் புத்துயிர் பெற்று வரும் நிலையில், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் திறப்பு விழாவின் போது மோடி தனது மெய்நிகர் உரையில், மொத்த நிகழ்நேர ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுவதாக கூறினார். மேலும், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது என்றும் […]

இலங்கை

கந்தளாய் பிரதேசத்தில் சரிந்த தொலைத்தொடர்பு கோபுரம் – ஐவர் படுகாயம்

  • July 4, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த. தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்ததில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.குறித்த சம்பவம் இன்று (04) பிற்பகல் இடம் பெற்றுள்ளது. வேகமாக வீசிய காற்றினால் கந்தளாயில் நிர்மானிக்கப்பட்டிருந்த எஸ் எல் டி மொபிடல் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைதொடர்பு கோபுரமே தபால் கந்தோர் அலுவலகத்தில் விழுந்துள்ளதாகவும் அங்கு கடமையாற்றிய ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. காயமடைந்த ஐந்து பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். […]

ஐரோப்பா

நோயாளியுடன் நெருக்கமாக இருந்த தாதி … உயிரிழந்ததால் விதிக்கப்பட்டுள்ள தடை

  • July 4, 2023
  • 0 Comments

நோயாளி ஒருவர் பல்வேறு உடல் நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அவருடன் இரகசிய உறவு வைத்திருந்திருக்கிறார் ஒரு செவிலியர்.இருவரும் நெருக்கமாக இருக்கும்போது திடீரென அந்த நோயாளி உயிர் பிரிந்ததையடுத்து அந்த பெண் செவிலியராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வேல்ஸ் நாட்டிலுள்ள Wrexham என்னுமிடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றிவந்தவர் Penelope Williams.அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருடன் Penelopeக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஓராண்டாக நெருங்கிப் பழகிவந்துள்ளார்கள். இந்நிலையில், ஒரு நாள் இரவு, மருத்துவமனையின் […]

இலங்கை

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் – அருட்தந்தை மா.சத்திவேல் அறிக்கை

  • July 4, 2023
  • 0 Comments

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவர் இன்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவ் அறிக்கையில் மேலும் அவர்,முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் சமூக கௌரவத்துக்கு உரியவர்கள். தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக விதையானோர் வரலாற்றுக்குரியவர்கள் மட்டுமல்ல அவர்களே எதிர்கால வரலாற்றினை உயிராகவும், உயிர்பாகவும் வைத்திருப்பவர்கள் என்பதற்கு மாற்று கருத்தும் இல்லை. வீரம் நிறைந்த வரலாற்றை வாழவைக்கும் பொறுப்பு […]

பொழுதுபோக்கு

நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம் இது… செல்வராகவன் டுவிட்

  • July 4, 2023
  • 0 Comments

மாமன்னன் படத்தில் வரும் நெஞ்சமே நெஞ்சமே பாடலைக் கேட்டு மயங்கி இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை வெகுவாக புகழ்ந்துள்ளார். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு,பகத் பாசில், கீர்த்தி சுரேஷ்,ரவீனா,லால், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் திரைப்படம் வெளியாகும் முன்பே இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. அதற்கு காரணம் மாரி செல்வராஜின் முந்தைய […]

இந்தியா

படுத்திருந்த மெத்தை வெடித்ததால் நபர் ஒருவர் பலி!

  • July 4, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் மேகாலயாவில் மின்சார படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த நபர், மெத்தை வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயா மாநிலம், கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம் ஸ்மிட் நகரில் உள்ள வீட்டில் நேற்று அதிகாலை பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை திறந்து பார்த்தபோது நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட […]