இலங்கை

திருமலையில் இன்று மூன்று பாடசாலைகளில் கையளிக்கப்பட்ட பசுமை வகுப்பறைகள்

  • July 11, 2023
  • 0 Comments

திருகோணமலையில் உள்ள மூன்று பாடசாலைகளில் முன்மாதிரி பசுமை வகுப்பறை ஒழுங்கமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இத் திட்டம் வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி பங்களிப்போடு Trinco Aid நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு செயற்படுத்தபட்டது. பசுமை வகுப்பறை என்பது நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்ட கற்றல் சூழலாகும். இது சுற்றுச்சூழல், விழிப்புணர்வு ,பிளாஸ்டிக் பாவனையை கட்டுப்படுத்தல் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு இடமாகும், மேலும் இது சுற்றுச்சூழலை மதிக்கும் வகையில் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் கற்றுக்கொள்வது என்பது குறித்து […]

ஐரோப்பா

ஐஸ்லாந்தில் 24மணிநேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள்… 2வது முறையாக வெடித்த எரிமலை

  • July 11, 2023
  • 0 Comments

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக்கின் அருகே ல் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஃபக்ரடால்ஸ்ஃப்ஜால் எரிமலை வெடித்தது. ரெய்காவிக்கில் இருந்து 20 மைல் தொலைவில் ரெய்க்ஊஏன்ஸ் தீபகற்பத்தில் மக்கள் வசிக்காத பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடித்து சிதறி, தீக்குழம்பை கக்கி வருகிறது. ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக வெடித்த இந்த எரிமலை அந்தாட்டின் பெரிய விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள போதிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கடுத்து சுவீடனுக்கு பச்சைக்கொடி காட்டிய துருக்கி அதிபர்

  • July 11, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் நேட்டோ படையில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டதால்தான், ரஷ்யா போர் தொடுக்க முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. இருந்தாலும் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வரும் உக்ரைன், நேட்டோ படையில் இணைவதற்கான மற்ற நாடுகளின் ஆதரவுகளை கோரி வருகிறது.ந்நிலையில் கடந்த வாரம் துருக்கி சென்ற அவர், அந்நாட்டு அதிபர் எர்டோகனை சந்தித்தார். அப்போது, உக்ரைன் நேட்டோ படையில் இணைய எர்டோகன் ஆதரவு அளித்தார். இதற்கிடையே சுவீடன் நேட்டோவில் […]

பொழுதுபோக்கு

நான் பன்னியா.. பன்னி கடிச்சா எப்படி இருக்கும் தெரியுமா? ப்ளூ சட்டையை விளாசிய ஜிபி முத்து

  • July 11, 2023
  • 0 Comments

வெற்றி, ஷிவானி நாராயணன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பம்பர் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து நடித்திருந்தார். தன்னை பன்னி என ப்ளூ சட்டை மாறன் பேசியதாக ஜிபி முத்து பதிவிட்டுள்ள வீடியோ பரபரப்பை கிளப்பி உள்ளது. டிக் டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமான ஜிபி முத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டார். ஒரே வாரத்தில் அந்த வீட்டில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து தொடர்ந்து […]

இலங்கை

இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட மன்னார் சட்டத்தரணிகள்

  • July 11, 2023
  • 0 Comments

மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(11) பணிப்பகிஷ்கரிக்கை முன்னெடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப் பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து , மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சமூகமளித்த சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப் பை […]

தென் அமெரிக்கா

பெருவில் பரவி வரும் அரிய வகை நோய் – அவசரநிலை பிரகடனம்!

  • July 11, 2023
  • 0 Comments

பெருவில் 90 நாட்களுக்கு தேசிய சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நரம்பியல் சம்பந்தப்பட்ட Guillain-Barre என சொல்லப்படுகிற ஒரு அரியவகை நோய் பரவி வருதாக கூறப்படுகின்ற நிலையில்,  இவ்வாறு  அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, குறித்த நோய் காரணமாக 165 வழக்குகள் பதிவாகியுள்ளன. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் குறித்து கடந்த ஜுன் மாதம் எச்சரிக்கை விடுத்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. Guillain-Barre சிண்ட்ரோம் என்பது ஒரு அரிய நரம்பியல் கோளாறு ஆகும், இதில் உடலின் நோயெதிர்ப்பு […]

பொழுதுபோக்கு

இந்த வயதிலும் இப்படியா? ரஜினி செய்தது தெரியுமா?

  • July 11, 2023
  • 0 Comments

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், […]

ஆசியா

ஜப்பானில் சீரற்ற காலநிலை : 03 பேர் உயிரிழப்பு!

  • July 11, 2023
  • 0 Comments

ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷூவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவரை காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பான் வானிலை ஆய்வும் மையம் சீறற்ற வானிலை குறித்து கீழ் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது. நிலச்சரிவு குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. சீறற்ற வானிலை காரணமாக ஆறுபேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலதிக சேதவிபரங்களை சரிபார்த்து வருவதாகவும், தலைமை அச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ தெரிவித்துள்ளார். இதேவேளை சமீபத்திய நாட்களில் உலகம் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 30,000 பொறியியலாளர்கள் தேவை!

  • July 11, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தற்போது சுமார் 30,000 பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது 2030 ஆம் ஆண்டளவில் 100,000 ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு பயிற்சி திறன் ஒதுக்கீட்டை 195,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது மேலும் அதில் கணிசமான சதவீதம் பொறியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் சிறப்பம்சமாகும். ஆஸ்திரேலியாவுக்கு பொறியியல் பணிக்காக திறமையான தொழிலாளர்களாக வருபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேறு தொழில்களில் ஈடுபடுவார்கள் என தெரியவந்துள்ளது. ஏனென்றால், சிலர் சரியான தகுதி பெற்றிருந்தாலும், […]

ஆசியா

நேபாளத்தில் 06 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்!

  • July 11, 2023
  • 0 Comments

நேபாளத்தில் 06 வெளிநாட்டவர்களுடன் பயணித்த ஹெலிகொப்டர்  ஒன்று மாயமாகியுள்ளது. 9NMV என்ற ஹெலிகொப்டர் ஒன்றே இன்று (ஜுலை 11) காலை காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில்,  காலை சுமார் 10 மணியளவில் கட்டுப்பாட்டு நிலையத்துடனான இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார். காணாமல் போன ஹெலிகாப்டரில் ஐந்து வெளிநாட்டவர்கள் இருந்ததாகவும், அந்த ஹெலிகொப்டரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://twitter.com/hello_CAANepal/status/1678647023023673345?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1678647023023673345%7Ctwgr%5Ede5406920821114826a1e67f817e59a3e9e06e04%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fiftamil.com%2Fwp-admin%2Fpost.php%3Fpost%3D36784action%3Deditmessage%3D1