அமெரிக்கா – ஈரான் போரில் புதிய திருப்பம் : எண்ணெய் கப்பல்கள் மீது குறி
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் தற்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
அதாவது ஹார்மூஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் வழியாக பயணம் செய்யும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் நிபுணரும், Trading.com நிறுவனத்தின் ஆஸ்திரேலிய தலைமை நிர்வாக அதிகாரியுமான பீட்டர் மெக்குயர், பதற்றம் அதிகரித்து வருகிறது, அமெரிக்கா பின்வாங்கப் போவதில்லை, நிலைமை தீவிரமடைந்து வருகிறது.
எண்ணெய் விநியோகத்தில் இதன் தாக்கம் மற்ற இடங்களை விட ஆசியா-சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். ஒட்டுமொத்த நிலைமையையும் கருத்தில் கொண்டு, அமெரிக்கா-ஈரான் நிலைமை எவ்வாறு தொடர்கிறது என்பதைப் பொறுத்திருந்து கவனிப்போம்” என்று கூறினார்.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் தனது எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய இரண்டு எண்ணெய் டேங்கர்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சாட்டியுள்ளது.
அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம், அந்த முக்கிய நீர்வழிப்பாதை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது தங்களது இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.




