ஹைதியில் கிறிஸ்தவ மத பேரணியில் துப்பாக்கி சூடு; 7 பேர் பலி
ஹைதி நாட்டில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டு மக்களில் பலர் சுய பாதுகாப்பு குழுக்களில் தங்களை இணைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவற்றில் வா காலே என்ற குழுவானது, பலரது நம்பிக்கையை பெற்றுள்ளது. ஆனால், உள்நாட்டு மக்களுக்கு எதிராகவும் சில சமயங்களில் இந்த குழு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால், வன்முறை தூண்டி விடப்படுவதுடன், மக்களிடையே அச்சம் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் கனான் என்ற புறநகர் பகுதியில் பாதிரியார் மார்க்கோ என்பவர் தலைமையில் […]













