இலங்கையின் பல பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வுக்கூறல்!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இன்று (28.08) முதல் அடுத்த சில நாட்களில் தீவின் தென்மேற்குப் பகுதியில் மழையின் நிலைமையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. […]













