வைகைப்புயலின் தம்பி மறைவிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மூர்த்தி
மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் வசித்து வந்த நடிகர் வடிவேலின் தம்பி ஜெகதீஸ்வரன்(52) கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் ஜெகதீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்கள் ஐராவதநல்லூர் பகுதியில் உள்ளவர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வடிவேலுக்கு 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மொத்தம் 7 நபர்கள் உடன் பிறந்தவர்கள் இந்நிலையில் அவரது தம்பி ஜெகதீஸ்வரன் தற்போது காலமாகியுள்ளார் அவரது வீட்டில் […]













