யாழில் அதிக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள்… படு மோசமான செயல்கள் அம்பலம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் சொந்த வாகனங்கள் இல்லாத மக்கள் முச்சக்கர வணிடிகளில் பயணத்தை மேற்கொள்ள அச்சமடையும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகமாக உள்ளன. ஒரு சில சாரதிகள் மனசாட்சி என்பதே இல்லாமல் பணம் வசூலிப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையில், யாழ். மாவட்ட முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீட்டர் பொருத்தப்பட்டால் பயணிக்கும் மக்களுக்கு கட்டணம் அதிகளவில் வராது. […]













