இலங்கை

இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையின் பலப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, கண்டி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின்  பல பிரதேசங்களுக்கு இன்று (28.09) முதல் நாளை காலை 06.00 மணிவரை 02ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வருமாறு,

களுத்துறை மாவட்டம் – இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவு
கண்டி மாவட்டம் – பஸ்பகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவு
மாத்தறை மாவட்டம் – கொட்டபொல மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவு

இதற்கிடையில், காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, அயகம ஆகிய பகுதிகளுக்க மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்