செய்தி

அமெரிக்கர்களின் மின்னஞ்சல்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

  • September 28, 2023
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவுத்துறை கணக்குகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சீன ஹேக்கர்கள் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்நாஅமெரிக்க வெளியுறவுத்துறை கணக்குகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சீன ஹேக்கர்கள் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு அரச திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளின் கலந்துரையாடலில் இது தொடர்பான உண்மைகள் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை செனட் சபையின் பிரதிநிதி ஒருவர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 10 கணக்குகளில் இருந்து 60,000 மின்னஞ்சல் […]

பொழுதுபோக்கு

‘Badass’ வெளியானது ‘லியோ’ செகண்ட் சிங்கிள் பாடல்

  • September 28, 2023
  • 0 Comments

லியோ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி… சும்மா பட்டையை கிளப்பி வருகிறது. விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை […]

உலகம்

பிரான்சில் லொறிக்குள் கடத்தப்பட்ட ஆறு பெண்கள் மீட்பு

  • September 28, 2023
  • 0 Comments

பிரான்சில் லொறியின் பின்புறத்தில் இருந்து ஆறு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர், பிபிசி அவர்களைக் கண்டுபிடித்து பொலிசாருக்கு எச்சரித்ததை அடுத்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நான்கு வியட்நாமியர்களும் இரண்டு ஈராக்கியர்களும், புலம்பெயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு, உள்ளே சிக்கி, பீதியடைந்து மூச்சுவிட சிரமப்பட்டனர். அவர்களில் ஒருவர் லொறியிக்குள் இருந்து பிபிசியிடம் பேசியுள்ளார். பின்னர் லொறியை தடுத்து நிறுத்திய காவல்துறையை தொடர்பு கொள்ள பிபிசி உதவியது. லொறி டிரைவரை பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான மனித கடத்தல் […]

இலங்கை

அழகு சாதனப்பொருள் விற்பனை நிலையத்தில் பெண் கிராம உத்தியோகத்தரின் மோசமான செயல்!

  • September 28, 2023
  • 0 Comments

பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவர் அழகு சாதனப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் களவெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தியோகத்தர் களவெடுத்த சம்பவம் அங்கிருந்த CCTV காணொளியில் பதிவாகியுள்ளது. விற்பனை நிலையத்திற்கு வருகை தந்த குறித்த பெண் கிராம உத்தியோகத்தர் அங்குமிங்கும் பார்த்த பின்னர் தாம் அணிந்திருந்த ஜேர்சியை ஓரிடத்தில் கழற்றிவைக்கின்றார்.அதன் பின்னர் ஜேர்சியையும் தனது கைப்பையையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த ஏதோ ஒரு பொருளை தனது ஜேர்சிக்குள் மறைத்து வைத்துக்கொள்கின்றார். அத்துடன் , அங்கிருந்த ஒரு சோடி காலணியையும் […]

இலங்கை

தரமற்ற தேங்காய் எண்ணெய் : சுற்றிவளைத்த அதிகாரிகள்

  • September 28, 2023
  • 0 Comments

பிலியந்தலை, போகுந்தர பிரதேசத்தில் தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையமொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் புகாரின் அடிப்படையில் புதன்கிழமை (செப். 27) கடையில் சோதனை நடத்தினர். தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட தரச் சான்றிதழை, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில், அதன் பெயர் பலகையில், கடையில் போலியாக காட்சிப்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தேங்காய் அபிவிருத்தி அதிகாரசபையின் தர நியமச்சான்றிதழ், உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகளைக் […]

ஐரோப்பா

ஸ்பெயின்: ஆசிரியை மற்றும் சக மாணவர்களை கத்தியால் குத்திய 14 வயது மாணவன்!

  • September 28, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் பள்ளி ஒன்றில் 14 வயது மாணவன் ஒருவன், வகுப்பறையில் தன் ஆசிரியை மற்றும் சக மாணவர்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெற்கு ஸ்பெயினின் Jerez de la Frontera நகரில் உள்ள பள்ளி ஒன்றில் காலைவேளையில் வகுப்புகள் தொடங்கும்போது இச்சம்பவம் நடந்துள்ளது. 14 வயது மாணவர் ஒருவர் கையில் கத்தியுடன் வகுப்பறையில் நுழைந்துள்ளார். கண்ணில் பட்டவரை எல்லாம் அவர் கத்தியால் குத்தத் தொடங்கியுள்ளார்.ஆசிரியர்கள் அவரை தடுக்க முயன்றபோது, குறித்த மாணவர் ஆசிரியை ஒருவரின் […]

இலங்கை

காலநிலை செழிப்பு திட்டத்திற்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை : ரணில்

  • September 28, 2023
  • 0 Comments

இலங்கையின் காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு 2030 ஆம் ஆண்டளவில் 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்ட. இன்றைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வு காணும் உயர்மட்ட உலகளாவிய முயற்சியான “பெர்லின் குளோபல்” மாநாடு இன்று (28.09) ஆரம்பமாகியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  இலங்கையின் காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு 2030 ஆம் […]

உலகம்

உலகின் 8ஆவது கண்டம் கண்டுபிடிப்பு – புவியியலாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

  • September 28, 2023
  • 0 Comments

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கண்டுபிடிக்கபப்ட்ட புதிய கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 8 ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நிகழ்வு உலக நாடுகள் பலவற்றில் முக்கிய செய்தியாக மாறியுள்து. கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஜீலந்தியா […]

இந்தியா

மணிப்பூரில் தொடரும் பதற்றம்: மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • September 28, 2023
  • 0 Comments

மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் மீண்டும் வன்முறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் பல்வாலை வடகிழக்கு மாநிலத்துக்கு திரும்ப அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போது ஸ்ரீநகரில் மூத்த காவல் கண்ணிப்பாளராக பணியாற்றி வரும் ராகேஷ் பல்வாலை முன்கூட்டியே அவரது சொந்த மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்திற்கு உதவும் வகையில் அவர் பணியாற்ற முடியும் என்று […]

ஆசியா

டெங்கு காய்ச்சலால் தத்தளிக்கும் பங்களாதேஷ் : 1,000 கடந்துள்ள இறப்புக்களின் எண்ணிக்கை

  • September 28, 2023
  • 0 Comments

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் சமீப வாரங்களில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 1,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் இதுவரை ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நோய் பரவல் இது என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். அசாதாரணமான பருவமழை கொசுக்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்புவது எளிதாக்கியுள்ளது.ஆனால் அதைக் கட்டுப்படுத்த அதிகாரிகளால் முடியாமல் போயுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தலைவலி, குமட்டல், மூட்டு மற்றும் தசை வலி ஆகியவை இதன் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலானது […]