வேலை வாய்ப்பு

இலங்கை மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதவி வெற்றிடங்கள்

இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவற்றிற்குள் தற்போது 4,000 க்கும் மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் காணப்படுவதுடன், இது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவற்றை இயக்குவதற்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் தற்போதைய பணியாளர்கள் போதுமானவர்கள்.

“பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், மூவாயிரத்து 292 அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 2,100 பேர் பணியிலுள்ளனர். ஆயிரத்து 192 பதவி வெற்றிடங்கள் உள்ளன.

இதேவேளை, இலங்கை மின்சார சபையில் 24 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் பதவிகள் இருந்தாலும் 21 ஆயிரம் ஊழியர்களே சம்பளப் பட்டியலில் உள்ளனர்.

குறிப்பிட்ட சேவைப் பணிகளுக்காக 3,000 வெளி பணியாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும் 3,000 பணியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் இந்த வெற்றிடங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, நாட்டின் நிலையான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு மக்கள் விரும்பத்தகாத ஆனால் அவசியமான தீர்மானங்களை எடுத்துள்ளது.

“அரசியல் ஆதாயத்திற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குள் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஆயிரம் பேருக்கு என்னால் வேலைவாய்ப்பு வழங்க முடியும். ஆனால் அத்தகைய நடவடிக்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானது. அரசியல் நலன்களை விட இந்த நிறுவனங்களின் நேர்மைக்கே நான் முன்னுரிமை அளிக்கிறேன்” – என்றார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

வேலை வாய்ப்பு

இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு – இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

  • September 27, 2023
இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ பயிற்சியாளர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குறித்த வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர் ஒரு போட்டிப் பரீட்சையை எதிர்கொள்வதுடன் ஒன்று
வேலை வாய்ப்பு

மின்வலு மற்றும் சக்தி அமைச்சில் வேலைவாய்ப்பு

  • October 15, 2023
மின்வலு மற்றும் சக்தி அமைச்சின் கீழ் முகாமைத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.   பிரபல்யமானவைஅமெரிக்காவில் 6 பேர் உயிரை பறித்த புழுதிப் புயல்by SR●May 2,

You cannot copy content of this page

Skip to content