இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு : முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • October 2, 2023
  • 0 Comments

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை தற்போதைக்கு மாற்றியமைப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். குறிப்பாக மாதந்தோறும் கட்டணம் மாறும் போது முச்சக்கர வண்டி கட்டணத்தை மாற்ற முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே தனியார் பேருந்து சாரதிகளின் சங்கம் பஸ் கட்டணத்திற்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளால் மக்கள் […]

இலங்கை

LTTE மற்றும் ISIS குறித்து LPBOA-ன் தலைவர் அதிரடி

  • October 2, 2023
  • 0 Comments

இந்நாட்டில் உள்ள ஐம்பது வீதமான மக்கள் சர்வதேச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நாளாந்தம் ஒரு ரூபாவையாவது பங்களிப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். LTTE மற்றும் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) பயங்கரவாத அமைப்புகளே தற்போது அதிக நிதியுதவி பெறும் அமைப்புகளாக இருப்பதாக தெரிவித்தார்.பெரும்பாலான நிதி நிறுவனங்கள் விடுதலைப் புலிகளின் நிதியினால் நடத்தப்படுகின்றன எனவும் தான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலே இதனைக் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். […]

இலங்கை

காலி பகுதியில் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தலம்!

  • October 2, 2023
  • 0 Comments

போர்த்துக்கேயர் மற்றும் டச்சு காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் காலப்போக்கில் புதைக்கப்பட்ட காலி கோட்டையின் நிலத்தடி பதுங்கு குழிகளை கண்டறிந்து, அவற்றை பொது கண்காட்சிக்காக திறக்க காலி ஹெரிடேஜ் அறக்கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. காலி கோட்டை என்பது இலங்கையின் காலி பகுதியில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட கோட்டையாகும். இது பின்னர் 17 ஆம் நூற்றாண்டில் டச்சு அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 400 வருட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1988 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ […]

அறிவியல் & தொழில்நுட்பம் ஐரோப்பா

ஸ்பெயினில் 6000 ஆண்டுகள் பழமையான ஜோடி காலணிகள் கண்டுபிடிப்பு!

  • October 2, 2023
  • 0 Comments

ஸ்பெயின் நாட்டில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஒரு ஜோடி காலணியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் உள்ள குகைகளில் இருந்து 6000 ஆண்டுகள் பழமையான காலணி ஜோடி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.புல்லில் தயாரான இந்த காலணிகள் வௌவ்வால்கள் வசிக்கும் பழைய குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து இந்த காலணியை பகுப்பாய்வு செய்து பார்த்ததில் காலணி ஆராயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. 19ம் நூற்றாண்டில் சுரங்க நிறுவனம் ஒன்று இந்த வௌவ்வால் குகையை தோண்ட […]

இலங்கை

தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்த திட்டம்!

  • October 2, 2023
  • 0 Comments

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித், பேருந்து கட்டணத்தை குறைந்தது 05 வீதத்தால் அதிகரிக்க அனுமதியளிக்குமாறு கோரியுள்ளார். நேற்று (01.10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 62 ரூபாவாலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த […]

இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை : வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!

  • October 2, 2023
  • 0 Comments

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி நில்வல கங்கை, ஜிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த ஆறுகளை அண்மித்து வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதிகளை கடந்து செல்லும் வீதிகள் மற்றும் புறவழிச்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்த ஆறுகளில் மழையின் அளவு ஓரளவு […]

இந்தியா

கேரளாவில் பேனா, பென்சில்களை கொண்டு தாளம் போட்ட மாணவர்கள்!

  • October 2, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம், கேரளாவில் உள்ள பள்ளி வகுப்பறையில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்களின் வீடியோவை பகிர்ந்து, அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். கேரள மாநிலம், திருவாங்கூரில் அரசு பள்ளி ஒன்று இருக்கிறது. அந்த பள்ளியில் 7ம் வகுப்பு பயின்றுவரும் சில மாணவர்கள், வகுப்பறையில் பென்சில் மற்றும் பேனா ஆகியவற்றை கொண்டு பெஞ்சில் தாளம் போட்டுள்ளனர்.இதனை, அவ்வழியாக சென்ற ஆசிரியர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மாணவர்கள் தாளம் போட்டு தனது கலைத்திறமையை வெளிப்படுத்தும் […]

பொழுதுபோக்கு

மெக்சிகோவில் தேவாலயமொன்றின் மேற்கூரை உடைந்து வீழ்ந்ததில் பல உயிரிழப்பு !

  • October 2, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் உள்ள தேவாலயமொன்றின் மேற்கூரை உடைந்து வீழ்ந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மெக்சிகோவின் கடலோர மாநிலமான தமௌலிபாஸில் உள்ள செண்டா குரூஸ் தேவாலயத்தின் கூரை உடைந்து வீழ்ந்ததில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ் அனர்த்தத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு தேவாலயத்தின் மதிய வேளையில் இடம்பெற்ற ஞானஸ்நானத்தின் போது அந்த தேவாலயத்தின் கூரை உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அனர்த்தத்தில் சிக்குண்டவர்களில் பல சிறார்கள் உள்ளடங்குவதாகவும் அங்கு தொடந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச […]

பொழுதுபோக்கு

“தளபதி 68” போட்டோவ பாருங்க… விஷயம் என்னவா இருக்கும்?

  • October 2, 2023
  • 0 Comments

லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபு இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய். இந்தப் படத்திற்காக அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் சூட்டிங் வரும் 3ம் தேதி சென்னையிலேயே துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் பாடல் காட்சிகளுடன் துவங்கவுள்ளதாகவும் இந்த பாடலுக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் […]

தமிழ்நாடு

பெண்கள் – குழந்தைகளுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை

  • October 2, 2023
  • 0 Comments

நவீனமயமாக்கப்பட்ட உலகில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மொபைல் போன் செயலி மற்றும் கணிணி தொழில்நுட்பங்கள் மூலம், பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சைபர் கிரிமினல்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் மட்டுமின்றி பள்ளி செல்லும் குழந்தைகளிடம், செயலிகள் வாயிலாக தொடர்பு கொண்டு, தவறான பாதைக்கு அழைத்து செல்லும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையிலே, பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் சைபர் கிரைம் குற்றங்கள் […]