இலங்கை

நாளைய தினம் முல்லையில் பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ள வடகிழக்கு சட்டத்தரணிகள்

  • October 2, 2023
  • 0 Comments

வடகிழக்கு சட்டத்தரணிகள் நாளை(03) முல்லையில் பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் மற்றும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்புகணிப்பை செய்வதாக முடிவெடுத்துள்ளனர் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சார்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு […]

உலகம்

மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள்!

  • October 2, 2023
  • 0 Comments

மருத்துவத்துக்கான நோபல் பரிசை இரண்டு அமெரிக்க மற்றும் ஹங்கேரிய விஞ்ஞானிகள் வென்றுள்ளனர். ஹங்கேரியைச் சேர்ந்த கேட்லின் கெரிகோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு எம்ஆர்என்ஏ கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்குவதில் அவர்கள் அளித்த ஆதரவிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக குறித்த இருவருக்கும் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்க பேஸ்போல் ஹாம்பவான் மூளை புற்றுநோயால் மரணம்

  • October 2, 2023
  • 0 Comments

அமெரிக்க பேஸ்பால் ஜாம்பவான் டிம் வேக்ஃபீல்டு மூளை புற்றுநோயால் உயிரிழந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்பால் விளையாட்டில் இருமுறை உலகத்தொடர் சாம்பியன் பட்டம் வென்றவர் டிம் வேக்ஃபீல்டு(57). அமெரிக்காச் சேர்ந்த ஜாம்பவானாக விளங்கிய இவர், தனது தனித்துவமான Pitching-காக கவனம் பெற்றார். இது அவரது Knuckleball விளையாட்டின் விரிவான பயன்பாட்டினால் சிறப்பிக்கப்பட்டது. பேஸ்பால் விளையாட்டில் இருந்து வேக்ஃபீல்டு ஓய்வு பெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன.இந்த நிலையில் தான் அவருக்கு மூளை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மருத்துவமனையில் […]

இலங்கை

திருகோணமலை – சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

  • October 2, 2023
  • 0 Comments

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வரும் முதியவர்களை கௌரவிக்கும் நோக்கில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட செயலகமும் ,காப்போம் அமைப்பும் இணைந்து புனித யோசப் முதியோர் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்களை கௌரவித்தனர். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி , மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் ,கிழக்கு மாகாண சமூகசேவை திணைக்களத்தின் தொழில்சார் பொறுபதிகாரியும், இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண […]

இலங்கை

அவசரகால மருந்து கொள்வனவு இடைநிறுத்தம்: கெஹலிய ரம்புக்வெல்ல

அவசரகால மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கொள்வனவுகளின் அவசரநிலை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், மற்றொரு தொற்றுநோய் போன்ற ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இந்த செயல்முறை மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். இதேவேளை, தற்போது சுமார் 170 முதல் 200 வரையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக […]

இலங்கை

26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

  • October 2, 2023
  • 0 Comments

வென்னப்புவ – மார்ட்டின் வனக்கல்லூரியின் அதிபர் உட்பட 26 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி இன்று (02.10) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் லுனுவில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் அதிபர், 4 ஆசிரியர்கள் மற்றும் 21 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக அதிபர், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் நான்கு பிள்ளைகள் மாரவில ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்தில் குளவி கூடு திடீரென கிளறி குளவி தாக்கியதாக தெரியவந்துள்ளது.

பொழுதுபோக்கு

குடிபோதையில் விபத்து… குழந்தைகளுடன் காரில் சிக்கிய சின்மயி..

  • October 2, 2023
  • 0 Comments

பிரபல பின்னணி பாடகி சின்மயி சாலை விபத்து ஒன்றில் சிக்கி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கும் சின்மயி. சமூக கொடுமைக்கு எதிராக தனது கருத்துக்களை அடிக்கடி தெரிவித்து வரும் இவர், பெண் வன்கொடுமைக்கு எதிராக அதிகமாக குரல் கொடுத்துள்ளார். இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே ஏற்பட்டு, அந்த […]

இலங்கை

அம்புலன்ஸ் வண்டியில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்: சாரதி தப்பி ஓட்டம்

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளக்கமம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனைக்கென மாதிரியுடன் எடுத்து சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான அம்புலன்ஸ் சாரதி தப்பியோடி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,, மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலையை […]

இலங்கை

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்!

  • October 2, 2023
  • 0 Comments

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (02.10) உத்தரவிட்டுள்ளது. மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்ததன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த விசாரணையில் அவர் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைத்ததற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பாபர் […]

பொழுதுபோக்கு

இதோ வந்துட்டாருல நம்ம ஆதி குணசேகரன்…. மாஸ் என்ட்ரி…. எதிர்நீச்சல் ப்ரோமோ

  • October 2, 2023
  • 0 Comments

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மரணத்திற்கு பின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தந்து. பிரபல நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தான் அடுத்த ஆதி குணசேகரன் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், மற்ற சில நடிகர்களின் பெயர்களும் இதில் அடிபட்டது. இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் புதிய ஆதி குணசேகரனாக நடிக்கவிருப்பதாக வேல ராமமூர்த்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மறைவால், ஆதி குணசேகரன் வீட்டை விட்டு […]