இலங்கை

வெல்லம்பிட்டிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

வெல்லம்பிட்டியவில் இன்று (ஒக்டோபர் 09) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். வெல்லம்பிட்டிய பிராந்தியாவத்தை பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வசூல் மழை

  • October 9, 2023
  • 0 Comments

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவந்த படம் ஜெய்லர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷராப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் முதல் நாளில் இருந்து உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் எதிர்பார்க்காத வசூலை ஜெயிலர் படம் செய்தது. அது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக லாபத்தையும் ஜெயிலர் கொடுத்தது […]

மத்திய கிழக்கு

காஸா  பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய இஸ்ரேல்!

  • October 9, 2023
  • 0 Comments

ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா  பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி காசா பகுதிக்கான எரிபொருள், உணவு விநியோகத்தை முடக்கியுள்ளதாக அந்நாட்டு சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், இது “மிருகத்தனமான மக்களுக்கு” எதிரான போரின் ஒரு பகுதியாகும் என்று கூறினார். 2007 ஆம் ஆண்டு பாலஸ்தீனப் படைகளிடம் இருந்து ஹமாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து இஸ்ரேலும் எகிப்தும் காஸா மீது பல்வேறு அளவிலான முற்றுகைகளை விதித்துள்ளமை […]

இந்தியா

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் சீனாவுக்கு தொடர்பு?: வெளியான பரபரப்பு தகவல்

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஏஜெண்டுகள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர். இவரது கொலை பின்னணியில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்தார். இதற்கு கண்டனம் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் நிலைமை கவலையளிக்கிறது – கிரம்ளின்!

  • October 9, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பிராந்தியங்களில் நிலவும் போர் பதற்றம் குறித்து மிகுந்த கவலையடைவதாக கிரம்ளின் இன்று (09.10) தெரிவித்துள்ளது. இந்த சூடான நிலைமை மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதலாக அதிகரிக்கக்கூடும் என்றும் கிரம்ளின் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிரம்ளின் செய்தித் தொடர்பாளர்  டிமிட்ரி பெஸ்கோவ்  மத்திய கிழக்கில் இஸ்ரேலைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகுந்த கவலையுடன் கவனித்து வருகிறோம். இந்த சூழ்நிலையானது கசிவு அபாயத்தால் நிறைந்துள்ளது, எனவே, நிச்சயமாக, […]

இலங்கை

யாழில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு : பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (08) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொழுதுபோக்கு

தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்… காரணம் என்ன?

  • October 9, 2023
  • 0 Comments

லியோ படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருக்கிறது. படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நடந்தவில்லை என்பது ஏமாற்றம் தந்தாலும் சமீபத்தில் ரிலீஸ் ஆன லியோ ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் படத்தை பற்றி பல்வேறு சர்ச்சைகளும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. விஜய் மற்றும் லோகேஷ் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்றும், அதனால் தான் லோகேஷ் கனகராஜ் அவர் […]

இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை : 71 ஆயிரம் பேர் பாதிப்பு!

  • October 9, 2023
  • 0 Comments

சீரற்ற காலநிலையினால் தீவின் பல மாவட்டங்களில் 18,898 குடும்பங்களைச் சேர்ந்த 71,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 555 குடும்பங்களைச் சேர்ந்த 1,910 பேர் 16 பாதுகாப்பான இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அனர்த்தம் காரணமாக 12 வீடுகள் முழுமையாகவும், 1,004 […]

உலகம்

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் : கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

  • October 9, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலை உலக எண்ணெய் விலை உயர்வை பாதிக்கலாம் என சர்வதேச விமர்சகர்கள் கூறுகின்றனர். பல்வேறு வர்த்தக தடைகள் விதிக்கப்பட்டாலும், ஆசிய சந்தைக்கு ஈரானின் கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்கிறது. ஆனால் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தீவிரமடைந்தால் ஈரானின் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடுவதை தவிர்க்க முடியாது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று (09.10) […]

இலங்கை

தெயுந்தரா ஆழ்கடலில் அதிநவீன செயற்கைக்கோள் கருவியை பொருத்திய 06 பேர் கைது!

  • October 9, 2023
  • 0 Comments

இலங்கையின் தெயுந்தரா ஆழ்கடலில் அதிநவீன செயற்கைக்கோள் கருவியை வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆழ்கடலில் பயணித்த கடற்படையினரால் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் 6 பேரும் நேற்று (08.10) கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் பயன்படுத்திய செயற்கைக்கோள் கருவியை விட […]