உலகம்

சிலியில் நெடுஞ்சாலையில் வெடித்து சிதறிய லொறி!

  • February 21, 2026
  • 0 Comments

சிலி (Chile’s) தலைநகர் சாண்டியாகோவில் (Santiago) உள்ள நெடுஞ்சாலையில் எரிவாயு லொறியொன்று தீப்பிடித்து  வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த லொறி   ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் மேற்படி சம்பவத்தால்   நெடுஞ்சாலையில் பயணித்த சுமார் 50 வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பாரிஸ் அருகே உள்ள இராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு – இளம் வீரர் பலி!

  • February 21, 2026
  • 0 Comments

பாரிஸ் அருகே உள்ள இராணுவ முகாமொன்றில் பிரெஞ்சு வீரர் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 அன்று கிளாமார்ட்டில் (Clamart) உள்ள பெர்சி (Percy)  இராணுவ பயிற்சி மையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மையத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறி வீரர்கள் மது அருந்தியதாகவும், இதன்போது அலெக்ஸாண்ட்ரே லாங்க்பீன்  (Alexandre Lanckbeen) என்ற வீரர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நான்கு வீரர்கள் கைது […]

இந்தியா செய்தி

தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்த விஜய்

  • February 21, 2026
  • 0 Comments

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளதாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கமைய இந்தத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இயங்குவார்கள் என்றும் விஜயம் அறிவித்துள்ளார். தலைமைக் கழக மையத் தேர்தல் அலுவலகத்தின் (Headquarters Central War Room) துணையுடன் தலைமைக் கழகம் அளிக்கும் நெறிமுறைகளுக்கு உள்பட்டு […]

உலகம் செய்தி

பலஸ்தீன ஒற்றுமை உறுதிமொழி – பிரித்தானியாவில் 1,028 கவுன்சிலர்கள் கையெழுத்து

  • February 21, 2026
  • 0 Comments

பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் உறுதிமொழியில் பிரித்தானியாவில் 1,028 உள்ளூர் கவுன்சிலர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த உறுதிமொழி, ஆயுத நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதிகளை விலக்க வேண்டும் என்பதையும், இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறல்களுக்கு கவுன்சில்கள் உடந்தையாக இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. வரவிருக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில் இது முக்கிய பிரச்சினையாக மாறக்கூடும் என பிரச்சாரகர்கள் நம்புகின்றனர். இந்த நடவடிக்கை நெறிமுறை முதலீடுகளை உறுதி செய்யும் முயற்சி என்றும், குடியிருப்பாளர்களின் கோரிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் ஹாக்னி கிரீன் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காடு : மக்களை வெளியேறுமாறு உத்தரவு!

  • February 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள காஃப்னிஸ் க்ரீக் (Gaffneys Creek) அருகே பாரிய காட்டுத்தீ பரவி வருகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அரசாங்கம் இன்று உத்தரவிட்டுள்ளது. தீ வேகமாக முகடுகளில் பரவியதால், A1 சுரங்கக் குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மிக உயர்ந்த எச்சரிக்கையை விக்டோரியா அவசர சேவைகள் பிறப்பித்துள்ளது. மேற்படி காட்டுத்தீ மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளில் மூன்று சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த தீயினால் சுமார் 600 […]

பொழுதுபோக்கு

தீவிர உடற்பயிற்சியில் விஷால்!

  • February 21, 2026
  • 0 Comments

நடிகர் விஷால் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் படங்களை facebook-ல் பகிர்ந்துள்ளார். படங்களுடன் அவர், ” Good morning darlings. தலை முதல் கால் வரை மனதையும் சமநிலையில் வைத்திருக்க முடியுமானால், உலகில் நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் நாம் உலகத்தின் உச்சத்தில் இருப்பது போன்ற உணர்வை அது கொடுக்கும். எனது ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியில் எனக்கு மற்றொரு உலகத்தை காட்டிய சாய் தன்ஷிகா மற்றும் யோகினி இருவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் கவனம் […]

உலகம் செய்தி

அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் வெனிசுலாவில் 379 அரசியல் கைதிகள் விடுதலை

  • February 21, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் ஏகமனதாக பொது மன்னிப்பு சட்டமொன்றை ஏற்றுக்கொண் நிலையில் இந்தச் சட்டத்துகக்கமைய, 379 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். சட்டமன்ற துணைத் தலைவர் ஜார்ஜ் அரேசா (Jorge Arreaza) இதனை அறிவித்துள்ளார் இவர்கள் இன்றிரவு முதல் நாளை காலை வரை விடுவிக்கப்படலாம். பொது மன்னிப்பு வழங்குவதற்கான கோரிக்கைகள் தகுதிவாய்ந்த நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ள நிலையில் இடைக்கால அதிகாரிகளால் இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய பணக் கொள்ளை – இன்னும் தீர்வு கிடைக்காதது ஏன்?

  • February 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நடந்த மிகப்பெரிய பணக் கொள்ளை சம்பவமாக கருதப்படும் செக்யூரிட்டாஸ் டிப்போவி [Securitas Depot] கொள்ளை இடம்பெற்று20 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் வழக்கு இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி ஆம் திகதி 21 அன்று, கென்ட் [Kent] பகுதியில் உள்ள டொன்பிரிட்ஜ் [Tonbridge] நகரில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. ஆயுதங்களுடன் வந்த கும்பல், முகாமையாளரை அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் கடத்தினர். பின்னர் அவரை பயன்படுத்தி பணம் […]

இலங்கை செய்தி

மாத்தறை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் பலி

  • February 21, 2026
  • 0 Comments

மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் இன்று (21) பிற்பகல் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. காரொன்றில் வருகை தந்த இருவர் இந்தத் துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த துப்பாக்கி பிரயோகத்தின் போது காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மி.மீ ரகத்தைச் […]

உலகம்

உறுதியானது ட்ரம்பின் சீன விஜயம்: திகதியும் நிர்ணயம்!

  • February 21, 2026
  • 0 Comments

அமெரிக்க US ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Donald Trump சீன China விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான திகதி விபரமும் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மார்ச் 31 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப், பீஜிங் Beijing செல்வார் எனவும், ஏப்ரல் 02 ஆம் திகதிவரை அங்கு தங்கி இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் Xi Jinping தொலைபேசியில் உரையாடினார். இதன்போது சீனா வருமாறு ட்ரம்ப்புக்கு அழைப்பு […]