ஐரோப்பா

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம்!

  • February 21, 2026
  • 0 Comments

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இரத்து செய்ததை தொடர்ந்து இன்று பிரித்தானியாவின் பங்குச் சந்தை குறியீடுகள் உச்சம் தொட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புளூ-சிப் FTSE 100 நிறுவனத்தின் பங்குகள்  10,745.76 புள்ளிகளில் சாதனை உச்சத்தை எட்டிய பின்னர் பங்குச் சந்தை குறியீடு 0.5% உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ட்ரம்ப் வரிகளை விதிக்க மாற்று முறைகளைத் தேடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதை சந்தைகள் கருத்தில் கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொடர்புடைய […]

இலங்கை

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

  • February 21, 2026
  • 0 Comments

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

4000 ரூபாயால் மீளவும் அதிகரித்த தங்கத்தின் விலை!

  • February 21, 2026
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சுமார் 4000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்றைய  நிலவரப்படி 22 காரட் பவுண் ஒன்றின் விலை 366,300 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று   362,600 ஆக பதிவாகியிருந்தது. இதற்கிடையில்,   24 காரட் தங்கத்தின் விலை  396,000 ஆக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

தனுசுக்கு ஐஸ் வைக்கும் நடிகை!

  • February 21, 2026
  • 0 Comments

தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் ஆகியோர் தொடர்பில் கிசு கிசுக்கள் காட்டுத் தீ போல் பரவிவரும் நிலையில், அதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல தகவல் வெளிவந்துள்ளது. “தனுஷ் சார் ஒரு கலைக்கூடம்.” என்று நடிகை மிருணாள் தாகூர் புகழாரம் சூட்டியிருக்கிறார். தனுஷ், மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கின்றனர், விரைவில் கரம்பிடிக்கவுள்ளனர் என்று இணையத்தில் கடந்த சில மாதங்களாகே தகவல்கள் பகிரப்பட்டுவந்தன. இதற்கு மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர் இந்த விவகாரம் தொடர்பில் […]

ஐரோப்பா

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்க தீர்மானம்!

  • February 21, 2026
  • 0 Comments

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான விசாரணைக்காக அவர் திடீரென கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிபிசி ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் லூக் பொல்லார்ட் (Luke Pollard), ஆண்ட்ரூ  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மன்னாராக மாறுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது மன்னர் சார்ள்ஸின்  […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தொகுதி பங்கீடு: பேச்சு நடத்த விசேட குழு அமைத்தது தி.மு.க.!

  • February 21, 2026
  • 0 Comments

தேர்தல் கூட்டணி அமைக்கும் நகர்வை வெற்றிகரமாக நகர்த்தி வரும் தி.மு.க., அடுத்தக்கட்டமாக தொகுதி பங்கீடு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த எழுவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவின் தலைமைப் பதவி டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துபை; பொதுச்செயலாளர் திருச்சி சிவா, ஆ.இராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ. வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏனைய குழு உறுப்பினர்களாவர்.

இந்தியா

செங்கோட்டை அருகே தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை!

  • February 21, 2026
  • 0 Comments

டெல்லி செங்கோட்டை அருகில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கோயிலொன்றை பயங்கரவாதிகள் இலக்கு வைக்கலாம் எனவும் உளவுத்துறை தரப்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாந்தினி சௌக்கின் சில பகுதிகள் உட்பட முக்கிய கோயில்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா கண்காணிப்பில் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சாந்தினி சௌக்கில் உள்ள ஒரு கோயிலை […]

பொழுதுபோக்கு

வெளியானது KHxRK Glimpse! இணைந்த கமல் – ரஜினி!

  • February 21, 2026
  • 0 Comments

நடிகர்களான ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் Glimpse வெளியாகியுள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகின்றார். மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் படத்தின் Glimpse இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. https://www.youtube.com/watch?v=TROFVicWrTE

ஐரோப்பா

சாகோஸ் தீவு ஒப்பந்தம் : எதிர்க்கும் முன்னாள் பிரதமர்கள்!! ட்ரம்பிடம் விசேட கோரிக்கை!

  • February 21, 2026
  • 0 Comments

சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸுக்கு மாற்றும் இங்கிலாந்தின் திட்டத்தை கைவிட அழுத்தம் கொடுக்குமாறு  முன்னாள் பிரதமர்களான போரிஸ் ஜான்சனும் (Boris Johnson) லிஸ் ட்ரஸும் ( Liz Truss) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு வாஷிங்டனின் அதிகாரப்பூர்வ ஆதரவு இருந்தபோதிலும், குறித்த தீவு கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியாவை ‘விட்டுக்கொடுக்க வேண்டாம்’ என்று ட்ரம்ப் சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார். ஈரானுக்கு எதிரான எந்தவொரு சாத்தியமான நடவடிக்கைக்கும் குறித்த தீவு பயன்படும் என்றும் பிரித்தானிய […]

இலங்கை செய்தி

இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, அமெரிக்கா ஆராய்வு!

  • February 21, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் Stephen T. “Web” Koehler, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்து பேச்சு நடத்தினார். இச்சந்திப்பில், பகிரப்பட்ட பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த நிவாரண திறன்களை மேம்படுத்தல், ஒத்துழைப்பை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்துதல் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்பு பிரதி […]