இலங்கை செய்தி

இனி எரிவாயுவுக்கு தட்டுப்பாடில்லை – 3900 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்

3900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 300,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3900 மற்றும் 3700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் முறையே எதிர்வரும் 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன.

எவ்வாறாயினும், இன்றைய தினமும் (22) நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், சில இடங்களில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

மேலும் போதுமான கையிருப்பை பேணுவதற்காக புதிய கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பெப்ரவரி மாத இறுதிக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை