தித்வா சூறாவளி : நிவாரணத் திட்டத்திற்காக 24.4 பில்லியன் ரூபாய் விடுவிப்பு!
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களின் கீழ் இதுவரை 24.4 பில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பொது நிதிக் குழுவிடம் தெரிவித்துள்ளனர். தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் பேரிடர் நிவாரணத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் பிற வளாகங்களை சுத்தம் செய்தல், வீட்டுப் பொருட்களை வாங்குதல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்குதல் ஆகியவற்றிற்காக அறிவிக்கப்பட்ட பெரும்பாலான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் […]













