ஐரோப்பா

உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் ஒருவர் மரணம்

உக்ரைனில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட வெடித்ததில் ரஷ்ய ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டதாக பல கிரெம்ளின் ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 45 வயதான மேஜர் ஜெனரல் விளாடிமிர் சவாட்ஸ்கி, அவர் இறக்கும் போது 14வது ராணுவப் படையின் துணைத் தளபதியாக இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது மாஸ்கோ படையெடுத்ததில் இருந்து குறைந்தது ஆறு ரஷ்ய ஜெனரல்கள் இறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து எவ்வித கருத்துக்களும் வெளியாகவில்லை., […]

இலங்கை

உரிய வடிகான்கள் இன்றி வீதிகளில் பாயும் வெள்ளநீர்.. பாடசாலை செல்லமுடியாது சிரமத்துக்குள்ளாகும் மந்துவில் மாணவர்கள்

  • December 1, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மந்துவில் கிராமத்தில் அமைந்துள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாடசாலையை சூழ உள்ள கிராமத்தின் மாணவர்கள் பாடசாலை செல்வதற்கான வீதிகள் அனைத்திலும் வெள்ளநீர் பாய்வதால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் […]

மத்திய கிழக்கு

இன்று முதல் மீண்டும் கடுமையான தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் – காசா முனையில் அதிகரித்துள்ள பதற்றம்!

  • December 1, 2023
  • 0 Comments

தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் மீண்டும் காசா முனையில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. காசாவின் தெற்கு, வடக்கு மற்றும் மைய பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸும் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே சுமார் 7 வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் காசாவில் சுமார் 12,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் […]

உலகம்

ஸ்பெயின் இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் இராஜதந்திர மோதல்

ஸ்பெயின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ், “சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கு இணங்க இஸ்ரேல் மீது கடுமையான சந்தேகம் உள்ளது” என்று கூறியதையடுத்து, இஸ்ரேலுடனான இராஜதந்திர மோதலை ஆழப்படுத்தியுள்ளார். அவரது சமீபத்திய கருத்து மூர்க்கத்தனமானது என இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, அதை ஒழிப்பதே இலக்கு என்று இஸ்ரேல் கூறுகிறது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையிலான எல்லை வேலியை தீவிரவாதிகள் உடைத்ததில் குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர் […]

இலங்கை

(Updated) யாழில் கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் இடையில் கலந்துரையாடல்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்

இலங்கை கடற்றொழிலாளர்கள் மொழி, மத வேறுபாட்டிற்கு அப்பால் ஒற்றுமையாக செயல்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர்கள் சமாசத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இலங்கையில் இருக்கின்ற கடற்றொழில் மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் நிறைவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ” வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுடைய அழைப்பை ஏற்று இலங்கையில் இருக்கின்ற […]

பொழுதுபோக்கு

‘ஞானவேல் ராஜா ஒரு களவாணி பய’: இயக்குநர் கரு.பழனியப்பன் விமர்சனம்

  • December 1, 2023
  • 0 Comments

நடிகர் கார்த்தி என்ன பெரிய சிவாஜியா என கேள்வி எழுப்பியுள்ள இயக்குநர் கரு. பழனியப்பன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை களவாணிப்பய என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினையில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக திரைத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார், கரு. பழனியப்பன், சேரன் எனப் பலரும் அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், ” பருத்திவீரனில் என்ன நடந்தது என்பது […]

இலங்கை

மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசனை: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார். இலங்கை கலால் உத்தியோகத்தர் சங்கத்தின் 23வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர், மதுபானம் தொடர்பில் நாட்டில் உள்ள சில சட்டங்களும் மக்களை சட்டவிரோத மதுபானத்திற்கு திரும்புவதை ஊக்குவிக்கின்றது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். சட்டவிரோத மதுபானங்களின் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த 20 வருடங்களில் சட்டப்பூர்வ மதுபானம் 50% […]

இலங்கை

தமிழ் மொழி மூலம் – முதலாம் இடம் பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை

  • December 1, 2023
  • 0 Comments

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம் இடத்தினை பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார். இதேவேளை,   சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரி முதலிடத்தையும், மூன்றாம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரியும் பெற்றுக் கொண்டுள்ளது.  

பொழுதுபோக்கு

நயன்தாராவின் அன்னபூரணி விருந்து அறுசுவையா? அறுவையா.?

  • December 1, 2023
  • 0 Comments

லேடி சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி இன்று வெளியாகி உள்ளது. ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். அன்னபூரணி கதை.. பிராமண குடும்பத்து பெண்ணான அன்னபூரணிக்கு சிறந்த செஃப்பாக வேண்டும் என்ற ஒரு லட்சியம் இருக்கிறது. அதற்கு தன்னுடைய குடும்ப கலாச்சாரமும், ஆச்சாரமும் தடையாக இருக்கும் நிலையில் வீட்டை விட்டு செல்கிறார் நயன்தாரா. இலட்சியத்தை தேடி செல்லும் அவர் சந்திக்கும் தடைகள் என்ன? […]

இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் போதகர் ஜெரோம் கைது!

  • December 1, 2023
  • 0 Comments

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகுமாறு நேற்று (30) அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் படி அவர் இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு […]