மத்திய கிழக்கு

குடிமக்கள் உயிர் இழப்பு மற்றும் இடப்பெயர்வுகள் தெற்கில் மீண்டும் நிகழக்கூடாது : ஆண்டனி பிளிங்கன்!

  • December 1, 2023
  • 0 Comments

வடக்கு காஸா பகுதியில் காணப்பட்ட விரிவான அழிவு மற்றும் இடப்பெயர்ச்சியைப் பிரதிபலிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலிய தலைவர்களுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “இஸ்ரேலின் தற்போதைய திட்டமிடல் பற்றிய விவரங்களை நாங்கள் விவாதித்தோம். மேலும் வடக்கு காசாவில் நாம் பார்த்த அளவில் பாரியளவிலான குடிமக்கள் உயிர் இழப்பு மற்றும் இடப்பெயர்வுகள் தெற்கில் மீண்டும் நிகழக்கூடாது  என்றும் அவர் வலியுறுத்தினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புகைப்படத்தை வீடியோவாக மாற்றும் AI கருவி!

  • December 1, 2023
  • 0 Comments

இப்போது எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே AI பற்றிய பேச்சுகள்தான். தொடக்கத்தில் சாதாரணமாக ஒரு சில விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பம், தற்போது கல்வி, மருத்துவம், ஐடி, விவசாயம் என எல்லாத்துறையிலும் ஆதிகத்தை செலுத்தும் நிலையை எட்டியுள்ளது. இதுவரை கோடிங், கன்டன்ட் ரைட்டிங் போன்ற விஷயங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பம், தற்போது எடிட்டிங்கிளும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது, கன்டென்ட் கிரியேட்டர்கள் மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்க பயன்படுவதால் தற்போது அதிகமாக இவற்றை […]

இலங்கை

இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் மேம்படும்!

  • December 1, 2023
  • 0 Comments

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டில் மழையுடனான வானிலை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (01.12) அறிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில்  100 மி.மீற்றர் கனமழை பெய்யும் எனதெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,  நாட்டின் ஏனைய பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்குப் […]

ஐரோப்பா

பிரான்ஸில் சுப்பர் மார்கெட்டில் இருந்து வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • December 1, 2023
  • 0 Comments

பிரான்ஸி சுப்பர் மார்கெட் ஒன்றின் ஊழியர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சனிக்கிழமை இரவு 8 மணி அளவில், அங்குள்ள சுப்பர் மார்கெட் ஒன்றினை மூடிவிட்டு, வீடு திருபிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவரை பின்னால் வந்த இருவர் கத்தியால் தாக்கியுள்ளனர். முதுகு மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் பாதசாரிகள் சிலர் SAMU மருத்துவக்குழுவினரை அழைத்து காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்தனர். என்ன […]

ஐரோப்பா

கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெர்மனி – அரசாங்கத்திற்கு காத்திருக்கும் அபாயம்

  • December 1, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் கடன் நெருக்கடி அதிகரித்துள்ளமையினால் கூட்டு அரசாங்கமானது கவிழும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜெர்மன் அரசாங்கமானது எதிர்வரும் ஆண்டு 60 பில்லியன் யூரோக்களை கடன் பெறுவதற்காக உத்தேசித்து இருந்தது. இந்நிலையில் இது ஜெர்மனியின் அடிப்படை சட்டத்துக்கு விரோதமான செயற்பாடு என ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியாக செயற்படுகின்ற AFD கட்சியானது வழக்கை தொடர்ந்து இருந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றமானது ஜெர்மனியுடைய தற்போதைய கூட்டு அரசாங்கமானது மேலதிக தொகையான 60 பில்லியன் யுரோக்களை கடன் […]

ஆசியா

வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா!

  • December 1, 2023
  • 0 Comments

வடகொரியா கடந்த வாரம் உளவு செயற்கை்கோளை ஏவிய பின்னர் அமெரிக்கா வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அமெரிக்க கரூவூலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சைபர் உளவு குழுவான கிம்சுகி மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இது வட கொரியாவின் மூலோபாய மற்றும் அணுசக்தி அபிலாஷைகளுக்கு ஆதரவாக உளவுத்துறையைச் சேகரித்ததாகக் குற்றம் சாட்டியது. வட கொரியா கடந்த வாரம் தனது முதல் உளவு செயற்கைக்கோளை […]

ஆசியா

சிங்கப்பூரில் பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு – அதிர்ச்சியில் ஊழியர்கள்

  • December 1, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் Pokemon Go Gameயை உருவாக்கிய யூனிட்டி சாப்ட்வேர், வீடியோ கேம் மென்பொருள் நிறுவனம் ஆள்குறைப்பு மற்றும் அலுவலகங்கள் மூடல் குறித்து தகவலை வெளியிட்டு பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது சுமார் 265 பணியாளர்களை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு, அதன் அலுவலகங்களையும் மூட உள்ளதாகவும்,14 இடங்களில் உள்ள அலுவலகங்கள் மூடப்படும் என்று கூறியுள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் பெர்லின் அடங்கும். நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களின் ஆட்குறைப்பு விகிதம் 3.8% என்று சொல்லப்படுகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் […]

இலங்கை

இலங்கையில் 2023 O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

  • December 1, 2023
  • 0 Comments

கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகளை இலங்கை பரீட்­சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. www.doenets என்ற இணையத்தளத்தின் ஊடக பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர். அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.    

இலங்கை

இலங்கையில் முச்சக்கர வண்டியில் ஏறிய பெண்ணால் காத்திருந்த அதிர்ச்சி

  • December 1, 2023
  • 0 Comments

  ஹோமாகம பிரதேசத்தில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் ஒருவர் அந்த முச்சக்கரவண்டியை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விசாரணையில் அவர் அணிந்திருந்த தங்க வளையலும் திருடப்பட்டது தெரியவந்தது. வழியில் சந்தேக பெண் மேலும் இருவரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்று இந்த திருட்டை மேற்கொண்டுள்ளார். எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இந்தியா செய்தி

கோவை ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவம் – காவல் ஆணையாளரின் அதிர்ச்சி தகவல்

  • November 30, 2023
  • 0 Comments

கோவை காந்திபுரம் 100″அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து தற்பொழுது வரை காவல்துறை மேற்கொண்ட விசாரணை குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் துணை ஆணையாளர்கள் சந்தீஷ், சண்முகம் ஆகியோர் தலைமையில் ஐந்து தனிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர் விஜய் என கண்டறியப்பட்டுள்ளதாகவோ அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்தார். விஜயின் […]