ஐரோப்பா

ஹமாஸ் தலைவரின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் நடவடிக்கை!

  • December 5, 2023
  • 0 Comments

பிரான்ஸ் இன்று (05.12) ஹமாஸ் காசா தலைவர் யாஹ்யா சின்வார் மீது சொத்து முடக்கம் விதித்துள்ளது. இஸ்லாமிய குழுவின் சமீபத்திய தலைவர், அதன் தேசிய தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக  நாட்டின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 13 அன்று பிரான்ஸ் ஹமாஸ் இராணுவத் தளபதி முகமது டெய்ஃப் மற்றும் அவரது துணைத்தலைவர் மர்வான் இசா மீது தேசிய அளவில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பிய யூனியன் மட்டத்தில் ஹமாஸ் தனிநபர்கள் மற்றும் […]

பொழுதுபோக்கு

நிலைமை மோசமா இருக்கு….. யாரும் உதவ வரல; சிக்கித்தவிக்கும் விஷ்ணு விஷால்

  • December 5, 2023
  • 0 Comments

தனது வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்ததோடு, நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இன்று மழை ஓய்ந்துள்ளதால் மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் வசித்து வரும் சினிமா பிரபலங்களும் இந்த பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று நடிகர் விஷால், தன் வீட்டில் தண்ணீர் புகுந்ததை அடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதேபோல் நடிகர் ரோபோ […]

பொழுதுபோக்கு

மனம் திறந்து ராஷ்மிகா,விஜய் தேவரகொண்டாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் நானி!

  • December 5, 2023
  • 0 Comments

விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா இருவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் நானி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ‘ஹாய் நானா’ திரைப்பட புரோமோஷன் விழாவில் இவர்கள் இருவரையும் தொடர்பு படுத்தி புகைப்படம் ஒன்று வெளியானதே இதற்கு காரணம். நடிகர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் நடிப்பில் ‘ஹாய் நானா’ திரைப்படம் டிசம்பர் 7ம் திகதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் ‘ஹாய் நானா’ திரைப்படத்தின் புரமோஷன் விழா […]

உலகம்

வரலாற்றில் முதல் முறையாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

  • December 5, 2023
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் மிக உயர்ந்த பெறுமதியை பதிவு செய்ய முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,111 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு குறைந்து வருவதும், அடுத்த ஆண்டு அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போரை மையமாகக் கொண்ட புவி-அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து […]

பொழுதுபோக்கு

நடிகர் விஷாலின் பதிவுக்கு சென்னை மேயர் பிரியா பதிலடி

  • December 5, 2023
  • 0 Comments

சென்னையில் மழை வெள்ளம் குறித்து நடிகர் விஷால் காட்டாக கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு மேயர் பிரியா தரமான பதிலடி கொடுத்துள்ளார். மிக்ஜாங் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை பெய்தது. இதனால், தலைநகர் சென்னையே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;- புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் […]

ஆசியா

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் நேபாள வீரர்களை நாடு திரும்ப உத்தரவு

  • December 5, 2023
  • 0 Comments

ரஷ்ய படையில் பணியாற்றிய நேபாளத்தைச் சேர்ந்த 6 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தங்கள் நாட்டு படைவீரர்களை ரஷ்ய ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும், ஏற்கெனவே பணியாற்றி வரும் நேபாளிகள் அனைவரையும் திருப்பி அனுப்புமாறும் நேபாளம் வலியுறுத்தியுள்ளது. ‘கூர்கா’ என அழைக்கப்படும் நேபாள படைவீரர்கள் தங்களின் வீரம் மற்றும் போர் திறத்துக்குப் பெயர் பெற்றவர்கள். கடந்த 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவப் படையில் நேபாளம் படைவீரர்கள் பணிபுரிய […]

இலங்கை

இலங்கையில் முதன் முறையாக டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வெளியீடு!

  • December 5, 2023
  • 0 Comments

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இன்று (05.12) வெளியிடப்பட்டது. இதனை உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் .அசோக பிரியந்த வெளியிட்டார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க முயன்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி!

  • December 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வீடு ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேக நபரைத் தேடி பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டுக்குள் நுழைய முற்பட்ட போது, ​​வீட்டில் இருந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன் போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசியா

பிலிப்பைன்ஸில் உள்ள லூசோன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • December 5, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் உள்ள லூசோன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று (04.12)  6.2 ரிக்டர் அளவில் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மணிலாவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ராய்ட்டர்ஸ் சாட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பிலிப்பைன்ஸில் அமைக்காலமாக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

விஜயகாந்த் நலம்பெற விஜய் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்…

  • December 5, 2023
  • 0 Comments

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர். தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜய் ரசிகர்களும் விஜயகாந்த் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் இறங்கி உள்ளனர். திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடிகர் விஜயகாந்த் நலம் […]