இலங்கை

இலங்கை – கொழும்பில் போலி கல்வி நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி! யுவதி கைது!

  • December 5, 2023
  • 0 Comments

கொழும்பில் போலி கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அதன் பணிப்பாளராக செயற்பட்ட 24 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். பம்பலப்பிட்டி லொரிஸ் வீதி பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையம் ஒன்றே மேற்படி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், கிரியுல்ல, நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்குத் தேவையான டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா கல்வியை வழங்குவதாக முகநூலில் விளம்பரங்களை வெளியிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்களை சேர்த்துக் […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது!

  • December 5, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் போது விமானத்தில் 3 பேர் இருந்ததால் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும் போது அடுக்குமாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து – 6 பேர் பலி!

  • December 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் இரு வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி கலாச்சாரம் மேலோங்கி வருகிறது. சொந்த பிரச்சினைகள் காரணமாகவும், போதையிலும் துப்பாக்கிகளை பயன்படுத்தி பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவிகளை படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டு அரசு துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வந்தாலும், தொடரும் இந்த சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நியூயார்க் நகரில் மர்ம […]

பொழுதுபோக்கு

விஷ்ணு விஷால் -அமீர்கான் பத்திரமாக மீட்பு… வைரலாகும் புகைப்படம்

  • December 5, 2023
  • 0 Comments

மிக்ஜாம் புயலால் சென்னை அதிகமான அளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. பலர் தங்களது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமில்லாமல் சில அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இன்றைய தினம் மழை குறைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து மீட்பு பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. பல இடங்களில் மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர். தனியார் தொண்டு நிறுவனங்களும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். […]

பொழுதுபோக்கு

ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை வளைத்துப்போட்ட ‘வி’ நடிகர்… கோலிவுட்டில் கிசு.. கிசு..

  • December 5, 2023
  • 0 Comments

‘வி’ நடிகர் ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை தனது கன்ட்ரோலில் வைத்திருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. தென் மாவட்டத்தை சேர்ந்த அந்த நடிகர் எப்படியாவது சினிமாவில் வென்று விட வேண்டும் என தவமிருந்தவர். பல ஆடிஷன்களுக்கு சென்று சின்ன சின்ன ரோல்களில் தலைக்காட்டிக்கொண்டிருந்தார். இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரிடம் படத்தில் ஒன்றிரண்டு சீன்களில் தலை காட்டும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகவே தனது திரை பயணத்தை தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஸ்வீட் இயக்குநர் இவரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை […]

ஆசியா

மராபி எரிமலை வெடிப்பு : 09 பேரின் உடல்கள் கண்டுப்பிடிப்பு!

  • December 5, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக மீட்பு நிறுவன அதிகாரிகள் இன்று (05.12) அறிவித்துள்ளனர். எரிமலை வெடிப்பில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 75 பேரில்  10 பேர் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. அவர்களில் 09 பேரின் உடல்கள் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறியமுடிகிறது.  சுமத்ரா தீவில் உள்ள மராபி எரிமலை கடந்த ஞாயிறன்று வெடித்தது.

ஐரோப்பா

பிரான்ஸில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை தடைவிதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல்!

  • December 5, 2023
  • 0 Comments

பிரான்ஸின் தேசிய சட்டமன்றம்  ஒருமுறை பயன்படுத்தக்கூடிய, எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை தடை செய்யும் மசோதாவிற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பில் நேற்று (04.120 நள்ளிரவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 104 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். குறித்த  மசோதாவானது செனட் சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டப் பின்னர் வரும் 2024 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்போசபிள் இ-சிகரெட்டுகள் சிறிய, பேட்டரியால் இயங்கும் சாதனங்களாகும். அவை இனிப்பு சுவைகளுக்காக பதின்ம வயதினரிடையே குறிப்பாக பிரபலமாக உள்ளன. அவற்றில் […]

ஐரோப்பா

கிறிஸ்துமஸ் காலத்தில் பெரும் ஆபத்தை சந்திக்கும் ஐரோப்பிய நாடுகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • December 5, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் ஐரோப்பா “பயங்கரவாத தாக்குதல்களின் பெரும் ஆபத்தை” எதிர்கொள்வதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகே நடந்த ஒரு பயங்கரமான தாக்குதலை தொடர்ந்து பிரெஞ்சு புலனாய்வாளர்கள்  மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளனர். “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் மற்றும் அது நமது சமூகத்தில் ஏற்படுத்தும் துருவமுனைப்பு, வரவிருக்கும் விடுமுறை காலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கான  மிகப்பெரிய ஆபத்து உள்ளது” என்று ஐரோப்பிய ஒன்றிய […]

இலங்கை

மன்னார் – அடம்பன் பொலிஸாருக்கு எதிராக மகஜர் ஒன்றை கையளித்த குடும்பம்!

  • December 5, 2023
  • 0 Comments

மன்னார் குருவில், வசந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் தொடர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், தங்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தொடர்ந்தும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (4)மதியம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். குறித்த மகஜரின் பிரதிகள் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான […]

இலங்கை

ஆதிவாசிகளின் பிரச்சினைகளுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு : செந்தில் தொண்டமானின் அதிரடி நடவடிக்கை!

  • December 5, 2023
  • 0 Comments

ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினைகளுக்கு  24 மணித்தியாலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுத்த செந்தில் தொண்டமான்! மட்டக்களப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட காலமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தனர். தங்களுடைய கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் கணித ,விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது ஆதலால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு தள்ளப்படுகின்றனர் எனவும், […]