எச்சரிக்கை!!கனடாவில் தேர்தலை இலக்காக வைத்து அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்கள்
கனடாவில் தேர்தலை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்களை மையப்படுத்திய சைபர் தலையீடுகள் பல்வேறு வழிகளில் தலைதூக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடிய சைபர் பாதுகாப்பு நிலையத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் அடுத்த பொதுத் தேர்தலிலும் இவ்வாறான சைபர் தாக்குதல்கள், தலையீடுகளை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.நுட்பமான வழிகளில் அதிகளவில் சைபர் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகின் அநேகமான தேசிய தேர்தல்களில் இவ்வாறான சைபர் தாக்குதல்கள் […]













