வட அமெரிக்கா

வட கரோலினாவில் இந்திய வம்சாவளி ஹோட்டல் அதிபர் சுட்டுக் கொலை.. தற்கொலை செய்து கொண்ட கொலையாளி!

  • December 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் மர்மநபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவரும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் பிறந்த சத்யன் நாயக்(46), அமெரிக்காவில் வட கரோலினாவில் உள்ள நியூபோர்ட் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். இவர் மனைவி, இரண்டு குழந்தைகள், தாயுடன் அங்கு வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஓட்டலுக்குள் நுழைந்த மர்மநபர், சத்யன் நாயக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சத்யன் ரத்த வெள்ளத்தில் […]

ஐரோப்பா

ஸ்வீடனின் நேட்டோ உறுப்புரிமை தொடர்பில் துருக்கியிடம் கனடாவும் அமெரிக்காவும் விடுத்துள்ள கோரிக்கை

துருக்கிக்கு ட்ரோன் கேமராக்களை ஏற்றுமதி செய்வதை கனடா மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, ஸ்வீடனின் நேட்டோ உறுப்பினர் முயற்சியை அங்காரா அங்கீகரிக்க வேண்டும் என்று கனடாவும் அமெரிக்காவும் வலியுறுத்துவதாக துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் இதனை தெரிவித்துளளார். அமெரிக்கா இந்த விவகாரத்தில் கனடாவுடன் உடன்பட்டதாகவும், ஆனால் ஸ்வீடனின் நேட்டோ முயற்சியை துருக்கியின் பாராளுமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றும், அக்டோபர் பிற்பகுதியில் அவர் மசோதாவை பரிசீலனைக்கு அனுப்பினார் என்றும் கூறியுள்ளார். ஜூலை […]

இலங்கை

மொனராகலையில் இளம் பிக்கு துஷ்பிரயோகம்; பெரிய பிக்கு கைது!

  • December 8, 2023
  • 0 Comments

விகாரையில் வைத்து 14 வயதுடைய இளம் பிக்கு ஒருவரை பாரிய பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 49 வயதான தேரர் கடந்த (07) ஒக்கம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மொனராகலை ஒக்கம்பிடிய. படுகொடுவ கந்த விகாரையில் வைத்தே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். சந்தேக நபரான பெரிய பிக்கு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் 02 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, வழக்கு விசாரணை 03/03/2024 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை

சீனாவிடமிருந்து இலங்கைக்கு முட்டை இன்குபேட்டர்கள் வழங்கி வாய்ப்பு

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் முட்டை இன்குபேட்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை வலுவூட்டும் நோக்கத்துடன், 100 முட்டை இன்குபேட்டர்கள் இன்று (2023.12.08) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் வழங்கி வைக்கப்பட்டது. சீனாவின் யுனான் மாகாணத்திற்கு விஜயம் செய்த பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, சீனத் தூதுவர் Qi Zhenhong அவர்கள் 100 இன்குபேட்டர்களை பிரதமரிடம் கையளித்தார், மேலும் இந்த இயந்திரங்கள் […]

வட அமெரிக்கா

தினம் ஒரு புட்டி ஜான்சன்ஸ் பேபி பவுடர்…அமெரிக்க யுவதியின் வினோத பழக்கம் !

  • December 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் ஒரு பெண் தினத்துக்கு ஒரு புட்டி ஜான்சன்ஸ் பேபி பவுடரை தின்பண்டமாக ரசித்து ருசித்து வருகிறார். உலகில் உண்பதற்கு என எத்தனையோ ரகங்கள் நிறைந்திருக்கின்றன. இயற்கையில் விளைந்தது, செயற்கையாக தயாரானது, சமைத்தது, சமைக்காதது என பல நாடுகள், கலாச்சாரங்கள், வளங்கள் ஆகியவற்றின் பின்னணியில், ரகம் ரகமான உணவுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை தினத்துக்கு ஒன்றாக ருசி பார்ப்பதென்றால் கூட, இந்த ஜென்மம் போதாது. ஆனபோதும் சில விசித்திரப் பிறவிகள், வித்தியாசமான ருசி ரசனையோடு நம் மத்தியில் […]

ஐரோப்பா

மனிதாபிமான நிதி உட்பட உக்ரைனுக்கு 4.5 பில்லியன் டாலர்கள் உதவி வழங்கும் ஜப்பான்

ஜப்பானின் பிரதம மந்திரி Fumio Kishida உக்ரைனுக்கு 4.5பில்லியன் டாலர் உறுதியளித்துள்ளார். 1 பில்லியன் டாலர் மனிதாபிமான மற்றும் மீட்பு உதவியில் உக்ரேனிய மக்கள் குளிர்காலத்தில் உயிர்வாழ்வதற்கான ஜெனரேட்டர்கள் மற்றும் பிற மின் விநியோகங்களுக்கான நிதியுதவி மற்றும் ரஷ்யாவால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள $3.5 பில்லியன் உக்ரைனுக்கான உலக வங்கி கடன்களுக்கான கடன் உத்தரவாதத்திற்கான நிதியையும் உள்ளடக்கியது. யுத்தம் தொடங்கியதில் இருந்து ஜப்பான் உக்ரைனுக்கு $7 […]

இந்தியா

நிலத்தகராரில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விஜய் பட வில்லன்!

  • December 8, 2023
  • 0 Comments

நிலத்தகராறில் ஆத்திரமடைந்த விஜய் பட வில்லன் தனது பக்கத்து நிலத்துக்கார இளைஞரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நடிகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியில் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் புபேந்தர் சிங். பாலிவுட் படங்களிலும் நடித்திருப்பவர். தமிழில் நடிகர் விஜய் நடித்த ’பத்ரி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தது நினைவிருக்கலாம். இவர்தான் தனது அண்டை நிலத்துக்காரரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

இலங்கை

மட்டக்களப்பில் -நோயை குணப்படுத்த வந்தவரை அடித்தே கொண்ட ஆலய பூசாரி..!

  • December 8, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் பேய், பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்தில் நோயை குணப்படுத்த சென்ற சகோதரனும் சகோதரியுமான இருவர் மீது ஆலய பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் ஆண் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (6) இடம்பெற்றுள்ளதாகவும், தாக்குதலை மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அனுரா ஜெயலத் என்பவரே […]

இலங்கை

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடன்

இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2022 ஏப்ரலில் தனது வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்தியதையடுத்து, நாட்டின் நிதித்துறையை நிலைநிறுத்துவதற்கு உதவுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஒப்புதல் அளித்துள்ளது.

அறிந்திருக்க வேண்டியவை பொழுதுபோக்கு

மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா? அதிசயம் ஆனலும் இது சத்தியம்…..

  • December 8, 2023
  • 0 Comments

மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா? குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா? ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது! இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! […]