இலங்கை

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை வருகை

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர் கோபால் பாக்லேக்குப் பிறகு தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். ஶ்ரீ சந்தோஷ் ஜா இதற்கு முன்னர் பெல்ஜியத்திற்கான இந்திய தூதுவராக கடமையாற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசியா

ஊழல் குற்றச்சாட்டு: ஜப்பானில் ஆளுங்கட்சி அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்த உத்தரவிட்ட பிரதமர்

  • December 21, 2023
  • 0 Comments

ஜப்பானில் ஜனநாயக லிபரல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தேர்தல் நன்கொடை நிதியை ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தங்களுடைய சொந்த காரணங்களுக்காக செலவு செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவிட்டார். இதற்கிடையே நன்கொடை நிதியை ஊழல் செய்ததாகக்கூறி 4 மந்திரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய கட்சியின் தேசிய தலைவர் பதவியை புமியோ […]

இலங்கை

இலங்கையில் எதிர்பாராத அளவு உச்சம் தொட்ட வெங்காயத்தின் விலை!

  • December 21, 2023
  • 0 Comments

இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதி தடை இன்னும் ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கையில் வெங்காயத்தின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலைவரப்படி  இலங்கையில ஒரு கிலோ வெங்காயம் 600 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் உள்நாட்டில் வெங்காய விலையை குறைவாக வைத்திருக்க மோடி அரசின் முயற்சிகளே இதற்குக் காரணம். ஏற்றுமதி சந்தையில் இருந்து இந்தியா விலகிய […]

இலங்கை

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்!

  • December 21, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளது. 201 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் புறப்பட்ட பத்து நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, விமானத்தின் விமானிகள் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டனர். விமானத்தை பழுதுபார்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதில் பெரும் தொகை செலவிடப்படுவதால் அதனை மீண்டும் கட்டுநாயக்கவிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, ​​இந்த விமானம் கட்டுநாயக்க […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் : டிசம்பர் மாதத்திற்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது!

  • December 21, 2023
  • 0 Comments

பயனாளி குடும்பங்களுக்கான டிசம்பர் தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை 1,410,064 ஆகும். இதன்படி, கடந்த ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் பயனாளி குடும்பங்களுக்கு செலுத்தப்பட்ட மொத்தத் தொகை 51,967 மில்லியன் ரூபாவாகும். 303,199 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள், 606,496 ஏழைக் குடும்பங்கள், 290,624 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் 209,745 இடைநிலைக் குடும்பங்களுக்கு தற்போது நிவாரணப் பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கை

முல்லைத்தீவு- முள்ளியவளை புதாரிகுடாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

  • December 21, 2023
  • 0 Comments

நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள் அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள். அந்தவகையில் முள்ளியவளை பகுதியில் நேற்று கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று (20) சட்டவிரோதமாக கசிப்புக்காய்ச்சி விற்பனை செய்யும் இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டு பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கையில் 9 […]

ஆசியா

அமெரிக்காவில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட மர்மப் பெட்டி!

  • December 21, 2023
  • 0 Comments

தாய்லாந்தில் உள்ள ஒரு மறுசுழற்சி ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட அட்டைப் பெட்டிக்குள் ஒரு ஜோடி மனித கால்களைக் கண்டு திகிலடைந்தனர். யாரேனும் ஒருவர் கொலை செய்யப்பட்டு கொள்கலனுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பில் தாய்லாந்து பொலிஸார் அமெரிக்க பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர். டிசம்பர் 19, செவ்வாய்கிழமை, பாங்காக்கிற்கு தெற்கே 100 மைல் தொலைவில் உள்ள ஸ்ரீராச்சாவிற்கு வெளியே உள்ள ஆலைக்கு சரக்கு வழங்கப்பட்டது. கார்ட்போர்டின் அடுக்குகளை இறக்கும்போது, இளஞ்சிவப்பு லேஸ்கள் […]

பொழுதுபோக்கு

நான் வேணுமா? உன் அம்மா வேணுமா? கண்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய்?

  • December 21, 2023
  • 0 Comments

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனுக்கும் பிரச்னை என்று தகவல் வெளியாகியிருக்கும் சூழலில் அதுகுறித்து புதிய விஷயங்களை பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். சல்மான் கானுடனான காதல் முறிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலிக்க தொடங்கினார். பிறகு இரண்டு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க கடந்த சில வருடங்களாகவே அவர்கள் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கான நிதி உதவியை அதிகரித்துள்ள சுவிஸ்

  • December 21, 2023
  • 0 Comments

உக்ரைனில் வாழும் மக்கள் குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கு வசதியாக, உக்ரைனுக்கு வழங்கும் நிதி உதவியை சுவிட்சர்லாந்து அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்து, ஏற்கனவே உக்ரைனுக்கு 13 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்நிலையில், மேலும் 12 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை உக்ரைனுக்கு வழங்குவது என சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சுவிட்சர்லாந்து வழங்கிய நிதி, 1,000 குடியிருப்புகளை பழுதுபார்க்க உதவியுள்ள நிலையில், மக்கள் குளிர்காலத்தை எதிர்கொள்ள வசதியாக, 1,300 வீடுகளுக்கு ஹீற்றர்களை வழங்க உள்ளது சுவிட்சர்லாந்து அரசு. இதுபோக, சுவிஸ் […]

இலங்கை

இலங்கையில் 09 ஆம் வகுப்பு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! பெற்றோர்களின் கவனத்திற்கு..!

  • December 21, 2023
  • 0 Comments

நுவரெலியா மாவட்டத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த அதே கல்லூரியின் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கிதுல்லே பல்லேடோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது. குறித்த ஆசிரியர்  மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட […]