இலங்கை

முல்லைத்தீவு- முள்ளியவளை புதாரிகுடாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள் அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.

அந்தவகையில் முள்ளியவளை பகுதியில் நேற்று கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று (20) சட்டவிரோதமாக கசிப்புக்காய்ச்சி விற்பனை செய்யும் இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டு பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கையில் 9 பரல்கள் மற்றும் கசிப்புக் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன இதன் போது மீட்க்கப்பட்டுள்ளன குறித்த பகுதியில் இரகசியமான முறையில் கசிப்பு காய்ச்சி வெளியிடங்களுக்கு விநியோகித்து வரும் குறித்த பகுதியே பொலிசாரின் சிறப்பு அதிரடிப்படையினரின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது மீட்கப்பட்ட பொருட்களையும் சான்று பொருட்களையும் மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்