ஹமாஸ்-இஸ்ரேல் பேச்சு தோல்வி? மக்கள் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் உத்தரவு
எகிப்தியத் தலைநகர் கைரோவில் ஹமாஸ் தலைவருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு தோல்வி அடைந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனினும் அது பற்றிய அதிகாரத்துவத் தகவல் இல்லை. ஒரு வாரம் சண்டையை நிறுத்துவதாகவும் அதற்குப் பதில் பிணையாளிகளை விடுவிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் கேட்டுக்கொண்டதை ஹமாஸ் நிராகரித்துவிட்டதாக Wall Street Journal சொல்கிறது. 2 தரப்புகளும் இடையே வெளியே அறிவிக்கப்படும் நிலைகளில் மிகப்பெரிய முரண்பாடு தெரிகிறது. பிணையாளிகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் போர் முடிந்தாக வேண்டும் என்கிறது ஹமாஸ். […]













