மத்திய கிழக்கு

ஹமாஸ் சுரங்கப்பாதையில் பணயக்கைதிகளின் சடலம் மீட்கப்பட்டதாக தகவல்!

  • December 25, 2023
  • 0 Comments

மிகப் பெரிய ஹமாஸ் சுரங்கப்பாதையின் உட்புறத்தில் ஐந்து பணயக்கைதிகள் இறந்து கிடந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான காட்சிகளும் வெளியாகியுள்ளன. நிலத்தடி சுரங்கப்பாதையின் நுழைவாயிலுக்கு அருகில் IDF வீரர்கள் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. காசா பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள ஜபாலியா நகரில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு கீழே 32 அடிக்கு மேல் தளம் அமைக்கப்பட்டுள்ளதாக டெய்லி மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்து கிடந்த ஐந்து பேருக்காக சுரங்கப்பாதையைச் சுற்றி ராணுவ வீரர்கள் பிரார்த்தனை செய்வதை […]

பொழுதுபோக்கு

‘விடாமுயற்சி’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பாவனாவிடம் மன்னிப்பு கேட்டார் அஜித்… அப்படி என்ன தப்பு செஞ்சிட்டார்?

  • December 25, 2023
  • 0 Comments

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சுமார் 30 நாட்கள் அஜர்பைஜான் நாட்டில் எடுத்து முடிக்க பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றனர். அங்கு சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. மிகவும் பரபரப்பாக எடுக்கப்பட்டுவரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், அஜித்துடன் நடிகர் ஆரவ், […]

இலங்கை

இலங்கையில் முன்னெடுக்கப்படும் அஸ்வெசும திட்டம் : தவறவிட்ட பயனாளிகளுக்கான அறிவிப்பு!

  • December 25, 2023
  • 0 Comments

அஸ்வசும நலன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது இதன் முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அப்போது நாம் எதிர்கொண்ட நடைமுறைச் சிக்கல்களை இப்போது பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். மீளவும் 20 லட்சம் குடும்பங்கள் […]

இலங்கை

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாட்டிற்குள் பிரவேசித்த 14 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

  • December 25, 2023
  • 0 Comments

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். UU 0050 என்ற விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்ட குழுவில், கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து 2023 வரை சட்டவிரோதமாக இடம்பெயர்நத 14 பேரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் கலவாஞ்சிகுடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குடிவரவு […]

ஐரோப்பா

தெற்கு உக்ரைனில் செல் தாக்குதல் : நால்வர் உயிரிழப்பு!

  • December 25, 2023
  • 0 Comments

தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்யா நடத்திய செல் தாக்குதலில் நான்கு உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரமாரி தாக்குதலால் 15 வயது சிறுவன் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். வீடுகள் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை ஒன்று தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “எதிரிகளுக்கு விடுமுறை இல்லை” என்று உக்ரேனிய ஜனாதிபதியின் அலுவலகத்தின் தலைவரான Andrii Yermak, Kherson தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.  

பொழுதுபோக்கு

பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடும் சலார்…

  • December 25, 2023
  • 0 Comments

பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள சலார் திரைப்படம் கடந்த வாரம் 22ம் தேதி வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், வசூலில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தாண்டின் மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை சலார் முறியடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சலார் படத்தின் மூலம் பிரபாஸ் – பிரசாந்த் நீல் கூட்டணி முதன்முறையாக இணைந்தது. உக்ரம், கேஜிஎஃப் படங்களுக்குப் பின்னர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலாருக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதே எதிர்பார்ப்புடன் பிரபாஸ் […]

ஐரோப்பா

ஆள் கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய விமானம் இன்று விடுவிக்கப்படலாம்!

  • December 25, 2023
  • 0 Comments

நிகரகுவா நோக்கி பயணித்த ஏ-340 விமானம் பாரிஸுக்கு கிழக்கே உள்ள வாட்ரி விமானத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில், அந்த விமானத்திற்கு தேவையான எரிபொருளை நிரப்புவதற்காக துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விமானமானது மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றி செல்வதாக தகவல் கிடைத்திருந்த நிலையில், அதிகாரிகள் அந்த விமானத்தை தடுத்து நிறுவத்தி விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அத்தில் பெருமளவான இந்திய பயணிகள் பயணித்திருந்தனர். அவர்களிடம் இரண்டு நாட்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில்,  பயணிகளை விசாரித்த பிறகு, […]

பொழுதுபோக்கு

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” வாரிசை ஹீரோவாக்கிய தனுஷ்

  • December 25, 2023
  • 0 Comments

நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி, நடித்து முடித்து இருக்கிறார். ராயன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவும் கைகோர்த்து இருந்தார். அதன் அப்டேட் வெளி வருவதற்குள்ளேயே தனுஷ் ஒரு அழகான காதல் கதையை இயக்கப் போகிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி இருக்கிறது. தனுஷின் குரலில் வருவதும் காதல், போவதும் காதல் என்று ஒரு சின்ன கிளிப்பிங் வீடியோ ஆரம்பிக்கிறது. #DD3 is Nilavukku […]

மத்திய கிழக்கு

மத்திய காசாவில் வார இறுதி தாக்குதலில் 68 பேர் உயிரிழப்பு!

  • December 25, 2023
  • 0 Comments

மத்திய காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 12 பெண்களும் 07 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் வார இறுதியில் போரில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக  உயர்ந்துள்ளது. முன்னதாக, காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக இருந்தது எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும் இது தொடர்பில் இஸ்ரேல் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.  

இலங்கை

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் : இருவர் உயிரிழப்பு!

  • December 25, 2023
  • 0 Comments

பாதுக்க, துன்னான பகுதியில் இன்று (25.12) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர் பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘மன்ன ரொஷான்’ என அழைக்கப்படும் டொன் இந்திக்க மற்றும் அவரது சீடன் என தெரியவந்துள்ளது. பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.