ஐரோப்பா

போரால் பொழிவிழந்த பெத்லகேம் நகரம்!

  • December 25, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் காரணமாக பெத்லகேமில் கிறிஸ்துமஸ் ஈவ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமான விவிலிய நகரம், பேய் நகரத்தை ஒத்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாக மேங்கர் சதுக்கத்தை அலங்கரிக்கும் பண்டிகை விளக்குகள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் காணவில்லை  என்றும் காலியான சதுக்கத்தில் டஜன் கணக்கான பாலஸ்தீனிய பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் மரம் இல்லாமல் மற்றும் விளக்குகள் இல்லாமல், இருள் மட்டுமே உள்ளது” என நகரவாழ் மக்கள் […]

இலங்கை

இலங்கை தேவாலயங்களில் பொலிஸார் குவிப்பு!

  • December 25, 2023
  • 0 Comments

உலக வாழ் கிறிஸ்துவ மக்கள் இன்று (25.12) நத்தார் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் பல தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலங்கையில் உள்ள தேவாலயங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் 011 247 27 57 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியும் என பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மதுபோதையில் வாகனம் […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் இன்றைய வானிலை!

  • December 25, 2023
  • 0 Comments

இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலையானது 14 14 டிகிரி செல்சியஸாக பதிவாகும் என met office தெரிவித்துள்ளது. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம் வெப்பமானதாக இருக்கும என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் வடக்கு ஸ்காட்லாந்தில் பனியைக் காணக்கூடிய மலைகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகள் லேசான மற்றும் மேகமூட்டத்துடன் தூறல் மழையுடன் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 1920 இல் வெப்பநிலை 15.6C ஐ எட்டியபோது பதிவாகிய வெப்பமான கிறிஸ்துமஸ் தினத்தை விட […]

இலங்கை

இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

  • December 25, 2023
  • 0 Comments

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் அதேவேளை வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 12.00 மணியளவில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடமத்திய மாகாணத்திலும் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வரை காற்று வீசக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை,  தற்காலிக […]

ஐரோப்பா

ஜேர்மனியில் சொத்துக்கள் வாங்க காத்திருப்போருக்கான செய்தி!

  • December 25, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வீடுகளின் விலைகள் மூன்றாவது காலாண்டில் 10.2 சதவீதம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முந்தைய இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது தொடர்ந்து நான்காவது காலாண்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் பல தசாப்தங்களில் மிகப்பெரிய நெருக்கடிக்கு மத்தியில் இந்த வீழ்ச்சி வந்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொருளாதார ஆராய்ச்சிக்கான ஜெர்மன் நிறுவனத்தின் கான்ஸ்டான்டின் கோலோடிலின், கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து சொத்துக்களுக்கான விலை வரம்பு வீழ்ச்சியடைந்து வருவதாக கூறியுள்ளார். பல ஆண்டுகளாக, […]

இலங்கை

இலங்கை முழுவதும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கை : 15000 பேர் கைது!

  • December 25, 2023
  • 0 Comments

இலங்கையில் பொலிஸாரினால் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நீதி நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் ஏறக்குறைய 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஹெராயின் உட்பட 440 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி சோதனை நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு காணப்பட்டது. இருப்பினும் உரிய அனுமதி இல்லாம் திடீரென சில வீடுகள் முற்றுகையிடப்பட்டது சட்டவிரோதமானது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். […]

இலங்கை

இலங்கையில் மீளவும் பரவும் கொரோனா வைரஸ் : ஒருவர் உயிரிழப்பு!

  • December 25, 2023
  • 0 Comments

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் சோதனைகள் மேற்கொள்ளப்படாமையினால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெளிவருவதில்லை. இந்நிலையில் கொவிட் தொற்று காரணமாக கம்பளை உலப்பனையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (24.12) உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிசோசிஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொவிட் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,   இந்தியாவில் பரவும் புதிய வகை கொவிட் வைரஸ் தொடர்பில் மக்கள் […]

இலங்கை

யாழில் நத்தார் கொண்டாட்டங்கள் : நள்ளிரவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது!

  • December 25, 2023
  • 0 Comments

யாழ் புனித மரியன்னை தேவாலயத்தில் நத்தார் விசேட திருப்பலி நள்ளிரவு 12 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஜேசு பாலன் பிறப்பினை தொடர்ந்து யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நத்தார்விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப் பட்டது. நத்தார் விசேட திருப்பலியில் யாழ் மறை மாவட்ட அருட்தந்தையர்கள் ,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை

யாழ் – வெற்றிலைக்கேணி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா மீட்பு!

  • December 25, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டை ஒன்று மீட்கப்பட்டது. அந்த சாக்கு மூட்டையை சோதனை செய்த கடற்படையினர், 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர். கேரள கஞ்சா மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.  

இலங்கை

மட்டக்களப்பில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

  • December 25, 2023
  • 0 Comments

மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு  பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு ( 25.12) நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. மரியால் பேராலயத்தில் பேராயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன. இதன்போது ஜேசு பிறப்பினை […]