இலங்கை

கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

  • January 1, 2024
  • 0 Comments

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 2023 இல் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 210,352 பேர் டிசம்பர் மாதத்தில் வந்துள்ளனர். நவம்பர் 2023 இல், 151,496 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். 2022 ஆம் ஆண்டில், 719,978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தனர். இதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் வளர்ச்சி 106.6% ஆகும்.

இலங்கை

தனமல்வில திலகரத்ன ஏரியில் மூழ்கி இளைஞன் பலி!

  • January 1, 2024
  • 0 Comments

தனமல்வில திலகரத்ன ஏரியில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று (31) பிற்பகல் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பலஹருவ திலகரத்ன ஏரி பகுதியில் மாடுகளுக்காக புல் வெட்டிக் கொண்டிருந்த இளைஞன் நேற்று (30) பிற்பகல் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. கித்துல்கோட்டை தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

  • January 1, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத குழுவினர் நேற்று (31.12) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்  இந்த பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு வீட்டை விட்டு ஓடிச்சென்றுள்ளதுடன், தாக்குதலை நடத்திய நபர்களை பிரதேசவாசிகளால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது. பெற்றோல் குண்டுத் தாக்குதலால் குடியிருப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், வீட்டின் சொத்துக்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். […]

இலங்கை

இலங்கை – கொழும்பு ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது!

  • January 1, 2024
  • 0 Comments

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை

சீன கப்பல்களை இலங்கையில் நிறுத்திவைக்க ஒருவருட காலத்திற்கு தடை!

  • January 1, 2024
  • 0 Comments

எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும் அதன் துறைமுகங்களில் நிறுத்திவைக்கவோ அல்லது அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) ஒரு வருட காலத்திற்கு செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 21, 2023 அன்று நடைபெற்ற  சந்திப்பின் போது, இந்திய மூலோபாய மற்றும் பாதுகாப்புக் கவலைகளுக்கு மதிப்பளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜனவரி 5, 2024 […]

இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் 1206 பேர் கைது!

  • January 1, 2024
  • 0 Comments

1,236 போதைப்பொருள் சோதனைகள் தொடர்பாக 1,206 சந்தேக நபர்களும் 23 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அனைவரும் நேற்று (31.12) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 86 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், 40 சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட […]

இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரம் வெளியானது!

  • January 1, 2024
  • 0 Comments

லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டர் 685 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூ.276 உயர்த்தப்பட்டு, புதிய விலை  1,707 ரூபாயாக பதிவாகியுள்ளது. 2.3 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் 127 உயர்த்தப்பட்டு அதன் புதிய விலை 795 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு […]

ஆசியா

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!

  • January 1, 2024
  • 0 Comments

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நிலநடுக்கமானனது  ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

இலங்கை

இலங்கையில் காவலுக்கு சென்ற வயோதிபருக்கு நேர்ந்த கதி

  • January 1, 2024
  • 0 Comments

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுவர்ன ஜெயந்திபுர பகுதியில் கட்டுத் துவக்கு வெடித்ததில் வயோதிபரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் இன்று (01) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேனைக்கு காவலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த கட்டு துவக்கு வெடித்ததாகவும் காலில் பலதத காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு படுகாயமடைந்தவர் மஹதிவுல்வெவ-சுவர்ன ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த டீ.எம்.சோமசிறி (57வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். தற்போது சேனை […]

பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகர் லியோ பிரபு காலமானார்

  • January 1, 2024
  • 0 Comments

பழம்பெரும் நடிகர் லியோ பிரபு, வயது மூப்பு காரணமாக தன்னுடைய 90 வயதில் உயிரிழந்திருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி மாலை 4 மணிக்கு இவர் காலமானார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நான் மகான் அல்ல, பருவ காலம், புதிர், பேர் சொல்லும் பிள்ளை, இரண்டும் இரண்டும் அஞ்சு, இது எங்க நாடு, அண்ணே அண்ணே போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். வயது மூப்பு காரணமாக தன்னுடைய […]