இலங்கை

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத குழுவினர் நேற்று (31.12) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்  இந்த பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு வீட்டை விட்டு ஓடிச்சென்றுள்ளதுடன், தாக்குதலை நடத்திய நபர்களை பிரதேசவாசிகளால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

பெற்றோல் குண்டுத் தாக்குதலால் குடியிருப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், வீட்டின் சொத்துக்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட காரணத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் யாழ்ப்பாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்