வவுனியா இரட்டை கொலையின் பிரதான சந்தேக நபருக்கு அச்சுறுத்தல்!
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைகொலை சம்பவம் தொடர்பில் தடுப்பு காவலில் உள்ள பிரதான சந்தேக நபரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து எரியுண்ட வீட்டு உரிமையாளரான குடும்பஸ்தர் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23ம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு […]













