ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஹ்மான் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பங்குபற்றுதலுடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக SJB இன்று முற்பகல் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியது. குறித்த […]













