இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஹ்மான் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பங்குபற்றுதலுடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக SJB இன்று முற்பகல் எதிர்ப்புப்
பேரணி ஒன்றை நடத்தியது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு நகர சபைக்கு அருகில் பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்