ஆசியா

சீனாவில் தங்கம் வாங்கி குவிக்கும் மக்கள்!

  • February 5, 2024
  • 0 Comments

சீனாவில் தங்க நகை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. புத்தாண்டு நெருங்கி வருவதால் இவ்வாறு மக்கள் தங்கம் வாங்கி குவிப்பதாக குறிப்பிடப்படுகின்றது. சீன நாட்காட்டியின்படி வரும் பத்தாம் திகதி டிராகன் ஆண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு தங்கம் வாங்குவதை ஐதீகமாக கொண்ட சீனர்கள், கடந்தாண்டு தங்க விலை சுமார் 17 சதவீதம் அதிகரித்ததால் முதலீட்டு நோக்கில் அதிகளவில் நகைகளை வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் அலுவலகங்களில் வழங்கப்பட்ட புத்தாண்டு போனஸில் டிராகன் படம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

கொழும்பில் இன்று முதல் மூடப்படும் வீதிகள்

  • February 5, 2024
  • 0 Comments

கொழும்பில் சில வீதிகள் இன்று முதல் சில கட்டங்களின் கீழ் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு அண்மித்த உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் நவம் மாவத்தை ஆகிய வீதிகளே மூடப்படவுள்ளன. அந்த வீதிகளை அண்மித்த பகுதியில் நிலத்தடி குழாய் பொறுத்தம் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை இதற்கு காரணம் என மாநகர பொறியியலாளர்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 19 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தையில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Instagram பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அறிமுகமாகும் புதிய வசதி

  • February 5, 2024
  • 0 Comments

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கான குறிப்பிடத்தக்க அப்டேட்டாக, அனுப்பிய தகவலை எடிட் செய்யும் வசதி அறிமுகமாகிறது. அதையும் குறிப்பிட்ட தடவைகள் வரை மேற்கொள்ள இன்ஸ்டாகிராம் அனுமதிக்கிறது. சமூக ஊடக தளங்கள் போட்டியாளர்கள் மத்தியில் தங்களை தக்கவைத்துக் கொள்ளவும், பயனர்களை ஈர்க்கவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாரி வழங்குவது வழக்கம். இது பயனர்களின் சமூக ஊடக பயன்பாடுகளை எளிதாக்குவதோடு, குறிப்பிட்ட தளத்தின் பிணைப்பையும் அதிகமாக்குகிறது. அந்த வகையில், பிரபல இன்ஸ்டாகிராம் தளத்துக்கான அப்டேட் ஒன்றினை அதன் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்டுள்ளது. இதன்படி […]

அறிந்திருக்க வேண்டியவை

அன்ட்டார்ட்டிக்காவில் அதிசயத் தீவு – எரிமலையின் உச்சியில் நிரம்பியிருக்கும் ஐஸ்

  • February 5, 2024
  • 0 Comments

அன்ட்டார்ட்டிக்காவின் மேற்குப் பகுதியில் மட்டும் 138 எரிமலைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Deception Island எனும் தீவில் துடிப்பான எரிமலை உள்ளதெனவும் நீராவி வெளியேறும் எரிமலையின் உச்சியில் ஐஸ் நிரம்பியிருக்கும் எனவும் கூறப்படுகின்றது. நீர்ப்பரப்பின் சில பகுதிகளில் வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸாக இருந்தாலும் கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், விலங்குகள் முதலியவை வாழ்கின்றன. செவ்வாய்க்கோளிலும் குளிரான சூழலில் எரிமலைகள் பல முன்பு இருந்தன. எரிமலை ஒன்று வெடித்ததால் கோளின் வளிமண்டலம் மாறியதாகவும் அங்கு இருந்த கடல்களும் நதிகளும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பணிப்புறக்கணிப்பால் பயணிகள் கடும் நெருக்கடி – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

  • February 5, 2024
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் பணிப்புறக்கணிப்பு தொடர்பாக சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஜெர்மனியில் தொடருந்து போக்குவரத்து அமைப்பானது பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு இருந்தது. அதாவது GDLF என்று சொல்லப்படுகின்ற தொழிற்சங்கமானது தமது அங்கத்தவர்களை சம்பளம் உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படுமாறு வேண்டி இருந்தது. அதாவது வருகின்ற திங்கட்கிழமை பிற்பகல் 6 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பு நடைமுறையில் இருக்கும் என்று இந்த அமைப்பானது ஏற்கனவே கூறி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது GDLF என்று சொல்லப்படுகின்ற தொழிற் சங்கத்துக்கும், மற்றும் தொடருந்து […]

ஆசியா

சிங்கப்பூரில் இளைஞர்களுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிமுகம்!

  • February 5, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் இளைஞர்களுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய இளைஞர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிமுகம் செய்யவிருக்கிறது. தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) அதனைத் தெரிவித்தார். அதன்படி இளையர்கள் Apple App Store அல்லது Google Play Store போன்ற செயலி விநியோகத் தளங்களில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது சரிபார்ப்பதற்குச் சில விவரங்கள் தேவைப்படலாம். அந்தத் தளங்களை நிர்வகிப்பது முக்கியம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் குடியேற்ற சட்டத்தால் சர்ச்சை – வீதிக்கு இறங்கிய மக்கள்

  • February 5, 2024
  • 0 Comments

பிரான்ஸில் குடியேற்ற சட்ட சீர்திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சனிக்கிழமை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவணங்கள் அற்ற வெளிநாட்டவர்கள் இதில் பங்கேற்று, இந்த சீர்திருத்தத்துக்கு எதிராக குரல் எழுப்பினர். Elisabeth Borne பிரதமராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட குடியேற்ற சீர்திருத்தத்தினை பிரெஞ்சு அரசமைப்புச் சபை கடந்த ஜனவரி மாத இறுதியில் சில தணிக்கைகளுடன் ஏற்றுக்கொண்டிருந்தது. குடியேற்றவாதிகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்த சட்டத்தினால் குடியேற்றவாதிகள் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

இலங்கை

இலங்கை வந்தவுடன் முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ள பசில் ராஜபக்ஷ!

  • February 5, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என அந்த கட்சி தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதியளவில் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்புவதாகவும் குறிப்பிட்டது. உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானமும் இதன் போடு எடுக்கப்படவுள்ளத. மேலும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன […]

இந்தியா செய்தி

மும்பையில் சட்டவிரேதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

  • February 4, 2024
  • 0 Comments

மும்பை போலீசார் சட்டவிரோதமாக தங்கியிருந்த 506 வெளிநாட்டவர்களை கண்டுபிடித்துள்ளனர். 411 நைஜீரியர்கள் உட்பட 506 வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். கண்டுபிடிக்கப்பட்டவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் அல்லது விசா காலாவதியானவர்கள் அல்ல என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக மும்பை காவல்துறைத் தலைவர் மிலிந்த் பரம்பே தெரிவித்தார். நைஜீரியர்கள் பலர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் செய்தி

ஆணுறைகள் மற்றும் கைவிடப்பட்ட உள்ளாடைகள்; விமானத்தில் நடந்த அருவருப்பான சம்பவங்கள்

  • February 4, 2024
  • 0 Comments

விமானப் பணிப்பெண்கள் பலரால் மிகுந்த மரியாதையுடனும் ஆர்வத்துடனும் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் விமானப் பணிப்பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பது வெளியில் பலருக்குத் தெரியாது. விமானத்தில் பயணித்தபோது தான் அனுபவித்த மிகவும் கேவலமான விஷயத்தை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு பெரிய அமெரிக்க விமான நிறுவனத்தில் கால் நூற்றாண்டு காலமாக விமானப் பணிப்பெண்ணாக இருந்த பெயர் குறிப்பிடாத ஊழியர் ஒருவர் Reddit இல் ஆஸ்க் மீ எனிதிங் அமர்வில் இதைச் சொன்னார். பயன்படுத்திய ஆணுறைகள் மற்றும் தூக்கி எறியப்பட்ட உள்ளாடைகளைப் […]