இலங்கை

மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை : 11 வர்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

  • February 8, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் 01.02.2024 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க விற்பனைக்காக தயாரிக்கப்படும் பாண்களின் நிறை குறித்து வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, ஆரையம்பதி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி ஆகிய நகர்ப் பிரதேசங்களில் இயங்கும் ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்களில் பாண்களின் எடை தொடர்பான சுற்றிவளைப்புக்கள் […]

இலங்கை

திருகோணமலை பகுதியில், துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது!

  • February 8, 2024
  • 0 Comments

திருகோணமலை -புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிபுர பகுதியில் விஷேட பொலிஸ் அதிரடி படையினரின் சுற்றிவளைப்பில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புல்மோட்டை டி-10 மணிபுர பகுதியைச் சேர்ந்த புஞ்சிபண்டாகே இந்திக சுகத் பண்டார (31வயது) எனவும் தெரியவருகிறது புல்மோட்டை விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் எட்டு […]

இலங்கை

இலங்கை : மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி!

  • February 8, 2024
  • 0 Comments

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் விஸ்வஜித் என்ற 19 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞன் களுத்துறையில் இருந்து ஹென்டியங்கலை நோக்கி பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹென்டியங்கல பாலத்திற்கு அருகில் இருந்த சுவரில் மோதியுள்ளார். இளைஞன் பலத்த காயமடைந்து 1990 ஆம் ஆண்டு களுத்துறை நாகொட போதனா […]

இலங்கை

மாணிக்கற்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட பிக்கு உட்பட மூவர் கைது

  • February 8, 2024
  • 0 Comments

ரூ.370 மில்லியன் பெறுமதியான இரண்டு நீல நிற மாணிக்க கற்களை விற்பனை செய்ய முயற்சித்த பிக்கு ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிக்கு வெலிவேரிய பிரதேசத்தில் வசித்துவருவதோடு, மற்றைய சந்தேக நபர்கள் 72 வயதுடையவர் எனவும், பிரபல அரசியல் கட்சியொன்றின் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் தந்தை எனவும் […]

ஆசியா

அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் ஈரான் ஆதரவு குழு கமாண்டர் பலி!

  • February 8, 2024
  • 0 Comments

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ஆதரவு பெற்ற கதாய்ப் ஹிஸ்புல்லா அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் அந்த அமைப்பின் மூத்த தளபதி (விஸ்ஸாம் முகமது அபு பக்கர் அல்-சாதி) ஆவார். கொல்லப்பட்டவர்கள் கிழக்கு பாக்தாத் மஷ்தல் என்ற இடத்தில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது, அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழு ஜோர்டான் நாட்டில் டிரோன் தாக்குதல் நடத்தியது. […]

உலகம்

அமெரிக்காவின் ஹெலிகாப்டர் ஒன்று மாயம்!

  • February 8, 2024
  • 0 Comments

அமெரிக்க கடற்படையினரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே உள்ள தளத்தில் இருந்து கலிபோர்னியாவுக்கு பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் மாயமானது. அழிவின் போது ஐந்து கடற்படையினர் அங்கு இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. CH-53E Super Stallion  ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினர் சிறப்புப் பணியைத் தொடங்கியுள்ளனர்.

இலங்கை

இலங்கை : பொதுபோக்குவரத்தில் சிவில் உடையில் பொலிஸார் சோதனை : பலர் கைது!

  • February 8, 2024
  • 0 Comments

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பல்வேறு பாலியல் துஷ்பிரயோகங்களைச் செய்பவர்களைக் கண்டறிய நேற்று (07.02) முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நேற்றைய சுற்றிவளைப்புகளில் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 24 பேர் என மொத்தமாக 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் நேற்று காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் மாலை 5.00 […]

பொழுதுபோக்கு

ஹேமமாலினியின் மகளுக்கு இப்படி ஒரு நிலையா? வைரலாகும் செய்தி

  • February 8, 2024
  • 0 Comments

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியர் தர்மேந்திரா – ஹேமமாலினி. இவர்களுக்கு இஷா, அஹானா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் இஷா ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், நடித்த ‛ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார். பரத் தக்னானி என்பவரை காதலித்து வந்த இஷா 2012ல் அவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பல மாதங்களாகவே கருத்து வேறுபாட்டால் தனித்தனியாக வாழ்ந்து […]

பொழுதுபோக்கு

விடாமுயற்சி : மார்ச் மாதத்துடன் அனைத்தும் முடிவு

  • February 8, 2024
  • 0 Comments

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், அடுத்தகட்ட படிப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக விடாமுயற்சி குழுவினர் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர். அதன்பிறகு இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெற இருக்கின்றது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் மார்ச் மாதத்தோடு விடாமுயற்சி படத்தின் அனைத்து கட்ட […]

ஆசியா

தென்கொரியாவுடன் உறவை துண்டித்த வடகொரியா!

  • February 8, 2024
  • 0 Comments

தென்கொரியாவுடன் முன்னெடுக்கப்பட்ட அனைத்து வித பொருளாதார ஒத்துழைப்பையும் வடகொரியா துண்டித்துக் கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளர். கொரியாவின் சுப்ரீம் பீப்பிள்ஸ் அசெம்ப்ளியில் நடந்த வாக்கெடுப்பில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மவுன்ட் கும்காங் சுற்றுலா சிறப்பு சட்டமும் கைவிடப்படும் என்ற அறிவிப்பால் அந்த பகுதிக்கு தென்கொரிய மக்களின் சுற்றுலாவுக்கு தடை ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வடகொரியா, தென்கொரியா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.