அறிந்திருக்க வேண்டியவை

நாய் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பதை அறியலாம் – பிரித்தானிய ஆய்வில் தகவல்

  • February 8, 2024
  • 0 Comments

ஒரு நாயின் மூக்கு அளவு, உடல் அளவு, பாலினம் ஆகியவை நாயின் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பதாகப் பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 584,000க்கும் அதிகமான நாய்களின் தகவல்கள் திரட்டப்பட்டன. தட்டையான முகங்களைக் கொண்ட Bulldog வகை நாய்களைவிடச் சிறிய, நீண்ட முக அமைப்பு கொண்ட dachshund அல்லது இத்தாலிய greyhound வகை நாய்களின் வாழும் காலம் 3 மடங்கு அதிகம். பிரிட்டனின் ஆகப் பெரிய நாய் அறநிறுவனத்தின் தரவு விஞ்ஞானி அதனைத் தெரிவித்தார். பெண் நாய்கள் ஆண் நாய்களைவிட […]

செய்தி

அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி

  • February 8, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ளார். இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த மாநாட்டில் இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி முக்கிய உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவுஸ்திரேலிய பிரதமர், அவுஸ்திரேலிய […]

ஆசியா

பாகிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்

  • February 8, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் தேர்தல் நாளில் இணையதளம் மற்றும் கையடக்க தொலைபேசி சேவையை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதாகும். வாக்கெடுப்பின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்பாராத குழப்பங்களுக்கு ஆயத்தமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன் மூலம் சுமார் 241 மில்லியன் மக்களைக் கொண்ட பாகிஸ்தானியர்களின் உரிமைகள் மீறப்படும் என பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வாழ்வியல்

தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

  • February 8, 2024
  • 0 Comments

தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயை நீங்கள் கடையில் இருந்து நேரடியாகவும் வாங்கலாம். அல்லது கடையில் வாங்கி வரும் எண்ணெய் மூலம் கறுவேப்பிலை போன்றவற்றை சேர்த்து காய்ச்சி பிரத்யேகமாகவும் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். மன அழுத்தம் தீரும்: எண்ணெய் தேய்த்து தலையில் அப்படியே மசாஜ் செய்யும்போது, தேவையற்ற மன அழுத்தம் நீங்கும். சொறி எடுக்காது: பல பேருக்கும் தலையில் அடிக்கடி சொறி எடுக்கும். தினமும் எண்ணெய் வைக்கும்போது சொறி எடுக்காது. கருப்பாக இருக்கும்: தினமும் எண்ணெய் தேய்க்கும் போது, […]

வட அமெரிக்கா

அமெரிக்க ஹெலிகொப்டர் மாயம் – தீவிர தேடுதல் நடவடிக்கையில் மீட்புக் குழுவினர்

  • February 8, 2024
  • 0 Comments

அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடற்படையினரை ஏற்றிச் சென்றவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே உள்ள முகாமில் இருந்து கலிபோர்னியாவுக்கு பறந்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹெலிகொப்டர் காணாமல் போகும் போது அதில் ஐந்து கடற்படையினர் பயணித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. CH-53E Super Stallion ரக ஹெலிகொப்டரே காணாமல் போயுள்ளது. ஹெலிகொப்டரைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புக் குழுவினர் விசேட […]

இலங்கை

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

  • February 8, 2024
  • 0 Comments

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்வரும் பண்டிகை காலத்தில் இந்த அரிசி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு அஸ்வெசும ஊடாக 24 லட்சம் பேருக்கு நன்மைகள் அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் கீழ் மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் எனவும் நமது நாட்டின் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை நிதி […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் காதலர் தின கொண்டாட்டம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • February 8, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒன்லைன் மோசடிகளில் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மோசடி எதிர்ப்பு மையம், காதலை வெளிப்படுத்தும் போர்வையில் பல மோசடி நடவடிக்கைகளில் மக்களை கவர்ந்திழுக்க பல்வேறு டேட்டிங் பயன்பாடுகளுக்கு வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது. 2023 ஆம் ஆண்டு காதலர் தினத்துடன் இணைந்து 484 மோசடி புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்கேம்வாட்ச் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அந்த மோசடி நடவடிக்கைகளின் மூலம் 40 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பணம் பொய்யாக திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

விளையாட்டு

கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோலி!

  • February 8, 2024
  • 0 Comments

Fab 4 என்பது சர்வதேச கிரிக்கெட் அளவில் சிறந்த 4 பேட்ஸ்மேன்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இந்த Fab 4 ல் இப்போது விராட் கோலி கடைசிக்கு சென்றுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இந்த Fab 4 என்ற சொல்லை முதன்முதலில் முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் க்ரோ தான் அறிமுகப்படுத்தினார். பின்னர் அதனை கிரிக்கெட் ரசிகர்களும் அதிகமாகப் பயன்படுத்த தொடங்கினார்கள். அந்தவகையில் இந்த Fab 4 ல் விராட் கோலி, ஜோ ரூட், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நாம் பேசப்போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் நியூரான்கள்!

  • February 8, 2024
  • 0 Comments

மூளையில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் மேம்பட்ட பதிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மனித மூளையில் நியூரான்கள் சார்ந்த உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட நியூரான்கள் குறித்த ஆய்வு முடிவு, மூளையைப் பற்றி நாம் புரிந்துகொள்ள புதிய பரிணாமத்தைத் திறந்து வைத்துள்ளது. இதன் மூலமாக நியூரான்களின் நுண்ணறிவு எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது என்பதைப் புரிந்துகெள்ள முடிகிறது. இந்த புதிய கண்டுபிடிப்புபால், மனிதர்களின் மொழி உற்பத்தி, பேச்சுக் கோளாறு போன்றவற்றைப் புரிந்துகொண்டு அதற்கு சிகிச்சை அளிக்க […]

ஐரோப்பா

பிரான்ஸில் பெண் ஒருவருக்கு பொலிஸார் செய்த மோசமான செயலால் சர்ச்சை

  • February 8, 2024
  • 0 Comments

பிரான்ஸில் யூத பெண் ஒருவரை தரையில் விழுத்தி கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 67 வயதுடைய யூத பெண்மணி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையம் ஒன்றில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றதாக தகவல் வெளியிட்டுள்ளது. காணொளி ஒன்றும் வெளியிட்டது. மேற்படி தாக்குதல் சம்பவம் காணொளியில் பதிவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தற்போதே தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண், வீதி சமிக்ஞையினை மீறியும், பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறியும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டு […]