இலங்கை

இலங்கையில் முட்டை விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு!

  • February 11, 2024
  • 0 Comments

இலங்கையில் பண்டிகைக் காலத்தில் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விலையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் முட்டையின் விலை 60 ரூபாயாக உள்ளது இதற்கிடையில், 43 ரூபா விலையில் சதொச விற்பனை நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இணையம் மூலம் வேலை தேடுபவர்களுக்கு எச்சரிக்கை

  • February 11, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இணையம் மூலம் வேலை வழங்குவதாகக் கூறி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்திய ஸ்கேம்வாட்ச் அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் போலி ஆன்லைன் வேலைகளால் ஆஸ்திரேலியர்கள் 24.7 மில்லியன் டொலர் இழந்துள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வேலை வாய்ப்புகள் குறித்து ஆஸ்திரேலியர்கள் அதிக அக்கறை காட்டுவதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், வேலைகளைப் பெறுவதற்கு முன் அல்லது தொடர்புடைய நேர்காணல்களில் பங்கேற்பதற்கு முன்பு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இதனால், […]

தென் அமெரிக்கா

பிரேஸிலில் வானில் பறந்துகொண்டிருந்த போது கழன்று விழுந்த விமானத்தின் டயர்

  • February 11, 2024
  • 0 Comments

பிரேஸிலில் ஒரு சக்கரத்தின் டயர் இல்லாமலேயே விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது. ஒரு சக்கரத்தின் டயர் இல்லாமலேயே ஏர்பஸ் விமானத்தை அதன் விமானி பத்திரமாக தரையிறக்கினார். ரியோ டி ஜெனீரோவில் இருந்து சாவோ பாலோ நகருக்குப் சென்ற அந்த விமானத்தின் இடது பின்பக்க சக்கரத்தின் டயர் நடு வானில் பறந்த போது கழன்று விழுந்து இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். சாவோ பாலோவில் விமான போக்குவரத்து குறைவான மற்றொரு முனையத்துக்கு திருப்பி விடப்பட்ட அவ்விமானம் ஓடுபாதை நடுவே தரையிறக்கப்பட்டது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிளின் புதிய AI அறிமுகம் – புதிய அம்சங்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • February 11, 2024
  • 0 Comments

தொழில்நுட்ப உலகில் செய்யறிவின் எண்ணிக்கை பெருகிவிட்டது என்றுதான் கூறவேண்டும். செய்யறிவு இல்லாத வலைதளங்களுக்கு செல்வது, நெட் கிடைக்காத தாத்தா, பாட்டி ஊருக்கு சென்றது போல உணரும் காலம் வந்துவிட்டது. நம்மை அசையவிடாமல் எல்லா வேலையையும் செய்துமுடிக்கும் AI கள் வரிசையாக நின்று வணக்கம் வைத்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எந்த நிறுவனத்தின் செய்யறிவு மீத அனைத்திற்கும் தலைமை வகிக்கப்போகிறது என்ற போட்டி ஜிகா பைட்ஸ் வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. சாட் ஜிபிடியில் ஆரம்பித்து, பார்டு, ஜெமினை, க்ராக், டால்-இ, ஜென்-கிராப்ட், கோபைலட் […]

ஐரோப்பா

பிரான்ஸில் மரண தண்டனையை இல்லாதொழிக்கப் போராடிய அரசியல்வாதி காலமானார்

  • February 11, 2024
  • 0 Comments

பிரான்ஸில் மரண தண்டனையை இல்லாதொழிக்கப் போராடிய மூத்த அரசியல்வாதி காலமானார் பிரான்ஸின் சட்ட மன்றம் 1981ஆம் ஆண்டு மரணதண்டனையை இல்லாதொழிக்கும் சட்டத்தை வாக்களித்து நிறைவேற்றியது. கடும் போராட்டத்தின் பின்னர் அந்தச் சட்ட மூலத்தைத் தயாரித்து அதனை மன்றில் நிறைவேற்றப் பாடுபட்டவர் அப்போதைய நீதி அமைச்சர் ரொபேர் பெடன்ரர் (Robert Badinter). அவர் தனது 95 ஆவது வயதில் காலமானார். பிரான்ஸில் மரண தண்டனையை இல்லாதொழித்த சட்டத்தின் சிற்பி எனப் புகழப்படுகின்ற அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் […]

விளையாட்டு

3வது போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – விராட் கோலி விலகல்

  • February 11, 2024
  • 0 Comments

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், விராட் கோலி பெயர் இடம்பெறவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். விராட் கோலியின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக் கொண்டதாக, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய பிரதமர் பெற்ற வருமானம் மற்றும் செலுத்திய வரி தொடர்பில் வெளிவந்த தகவல்

  • February 11, 2024
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் சுமார் 500,000 பவுண்ட் வரை வரி செலுத்தியுள்ளார். அந்தத் தகவலைப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டது. 43 வயதான சுனாக் 2022ஆம் ஆண்டு ஒக்டோபரில் பிரதமராகப் பதவியேற்றார். 2022-2023 நிதி ஆண்டில் அவர் 2.2 மில்லியன் பவுண்டு வருவாய் ஈட்டினார். அதற்கும் முந்திய ஆண்டைவிட அது 13 சதவீதம் அதிகமாகும். பிரதமராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் பெற்ற சம்பளம் சுமார் 140,000 பவுண்டு என தெரியவந்துள்ளது. எஞ்சிய 2.1 மில்லியன் பவுண்டை பங்கு, […]

ஐரோப்பா

பிரான்ஸில் ரயிலின் மீது ஏற முற்பட்ட அகதிக்கு நேர்ந்த துயரம்

  • February 11, 2024
  • 0 Comments

பிரான்ஸில் Eurostar ரயிலின் மீது ஏற முற்பட்ட அகதி ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில் நிலையத்துக்கு வருகை தந்த அகதி ஒருவர் தண்டவாளத்தைக் கடந்த EuroStar தொடருந்து தரித்து நின்ற பகுதிக்குச் சென்று, அதன் மீது ஏற முற்பட்டுள்ளார். அதன்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இரவு 10.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அகதி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது வரை […]

இலங்கை செய்தி

இலங்கையின் அடுத்த தேர்தல் – ஆஸ்திரேலியாவில் ரணில் வெளியிட்ட தகவல்

  • February 11, 2024
  • 0 Comments

இலங்கையின் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமான WION-க்கு வழங்கிய நேர்காணலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர் இடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுள்ளது. நேற்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசியா செய்தி

பிலிப்பைன்ஸில் 60 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட குழந்தை

  • February 10, 2024
  • 0 Comments

தெற்கு பிலிப்பைன்ஸில் நிலச்சரிவில் சிக்கிய மூன்று வயது சிறுமி புதைக்கப்பட்ட அறுபது மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார். மீட்பவர்கள் மேலும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையை கைவிட்டு, குழந்தையை மீட்டது “ஒரு அதிசயம்” என்று பாராட்டினர். மிண்டனாவ் பகுதியில் உள்ள தாவோ டி ஓரோ மாகாணத்தில் உள்ள மசாரா என்ற தங்கச் சுரங்க கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 77 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கத்தின் […]