பிரேஸிலில் வானில் பறந்துகொண்டிருந்த போது கழன்று விழுந்த விமானத்தின் டயர்

பிரேஸிலில் ஒரு சக்கரத்தின் டயர் இல்லாமலேயே விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.
ஒரு சக்கரத்தின் டயர் இல்லாமலேயே ஏர்பஸ் விமானத்தை அதன் விமானி பத்திரமாக தரையிறக்கினார்.
ரியோ டி ஜெனீரோவில் இருந்து சாவோ பாலோ நகருக்குப் சென்ற அந்த விமானத்தின் இடது பின்பக்க சக்கரத்தின் டயர் நடு வானில் பறந்த போது கழன்று விழுந்து இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
சாவோ பாலோவில் விமான போக்குவரத்து குறைவான மற்றொரு முனையத்துக்கு திருப்பி விடப்பட்ட அவ்விமானம் ஓடுபாதை நடுவே தரையிறக்கப்பட்டது.
பின்னர் அவசரகால வாகனங்களின் உதவியுடன் அந்த விமானம் ஓரமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 10 times, 1 visits today)