இலங்கை

சொகுசு வாகனங்கள் போலியாக பதிவு – மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 07 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

  • February 11, 2024
  • 0 Comments

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 05 பேர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான கார்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில், அனுமதி வழங்கப்படாத சுமார் 400 கார்களை திணைக்களம் பதிவு செய்துள்ளமை குறித்து தமக்கு தகவல் […]

வட அமெரிக்கா

போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் ரஷ்யா ; கனடா குற்றச்சாட்டு

  • February 11, 2024
  • 0 Comments

ரஷ்யா போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாக கனடிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ரஷ்யாவின் போலிப் பிரச்சாரங்களுக்கு கனடியர்கள் ஏமாற மாட்டார்கள் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நாசிபடைகளுடன் தொடர்புடைய உக்ரைன் கனடிய பிரஜைக்கு கனடிய நாடாளுமன்றில் கௌரவிக்கப்பட்டமை குறித்து ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டிருந்தார். மேற்குலக நாடுகள் தொடர்பில் ரஷ்யா பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.எனினும், இந்த பிரச்சாரங்களின் மூலம் கனடியர்களை முட்டாளாக்க முடியாது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனுக்கான ஆதரவு தொடர்ச்சியாக வழங்கப்படும் […]

இலங்கை

இலங்கை பொலிஸாருக்கு உயிர் அச்சுறுத்தல்!

  • February 11, 2024
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகத்தை தேடும் நீதி நடவடிக்கையை இலஞ்சம் கொடுத்து தடுத்து நிறுத்துவதற்கு கடத்தல்காரர்கள் முயற்சிப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இலஞ்சத்தின் தாக்கத்திற்கு மேலதிகமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்  ஜகத் சந்திரகுமார குறிப்பிடுகின்றார். இலங்கையில் இருந்து அனைத்து இலஞ்ச அச்சுறுத்தல்களும் இல்லாதொழிக்கும் வரை நீதி நடவடிக்கை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நடவடிக்கைகளினால் மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னர் 2000 ரூபாவிற்கு விற்பனை […]

ஆசியா

மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வருவதை தடுக்கும் இஸ்ரேலிய படைகள்

இஸ்ரேலியப் படைகள் அல்-அமல் மருத்துவமனைக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக ஆக்ஸிஜனை அடைவதைத் தடுத்ததாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக மூன்று நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் மருத்துவ உபகரணங்களை வழங்கவில்லை என்றும், மருத்துவமனையின் மின்சார ஜெனரேட்டர்களுக்கான எரிபொருளை வழங்குவதைத் தொடர்ந்து தடுப்பதாகவும் பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை

வவுனியா வெடுக்குநாரி மலைக்கு கொழும்பில் இருந்து சென்ற குழுவால் பதற்றம்!

  • February 11, 2024
  • 0 Comments

வவுனியா,வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு இன்று கொழும்பினை சேர்ந்த பெளத்த பிக்கு மற்றும் பெரும்பான்மையின மக்கள் உள்ளடங்கிய குழுவினர் விஜயம் செய்துள்ளனர். இவர்களுடன் தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் இராணுவத்தினரும் உடன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ பாதுகாப்புடன் சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் இது தங்களது இடம் என தெரிவித்து வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், அதன் சூழவுள்ள பகுதிகளையும் நீண்ட நேரம் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது குறித்த குழுவினரின் கருத்தை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் […]

பொழுதுபோக்கு

யாழ். இசை நிகழ்ச்சியில் குளறுபடி… ஹரிஹரனிடம் மன்னிப்பு கோரும் யாழ்ப்பாணத்து மக்கள்

  • February 11, 2024
  • 0 Comments

இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி குறித்து ஹரிஹரன் தமது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’ என்ற விழா இலங்கையில் யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் நேற்று முன் தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட நிலையில் நடிகை தமன்னா, கலா மாஸ்டர் போன்றவர்களும் ஒரு சில சின்னத்திரை பிரபலங்களும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த விழாவில் விஐபிகளுக்கு […]

பொழுதுபோக்கு

ஒட்டுமொத்த சினிமாவையும் தன் பக்கம் இழுத்த பழம்பெரும் நடிகருக்கு மூளை பக்கவாதம்

  • February 11, 2024
  • 0 Comments

பாலிவுட்டின் மூத்த பழம்பெரும் நடிகரான மிதுன் சக்கரவர்த்தி, உடல் நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 73. தற்போது அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் அவரின் மகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நடிகர் மிதுன் சக்கரவர்த்தி 1966ம் ஆண்டு பெங்காலியிட்ல வெளியான மிரிகயா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக நுழைந்தார். முதல் படத்திலேயே இவருக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று, ஒட்டு […]

ஆசியா

காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,176 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் அக்டோபர் 7 முதல் மொத்தம் 28,176 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 67,784 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 112 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 173 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள், மேலும் ஆயிரக்கணக்கான உடல்கள் காசா முழுவதும் […]

இலங்கை

இலங்கை பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : பலர் கைது!

  • February 11, 2024
  • 0 Comments

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 564 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 8 பேருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் 92 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றச்சாட்டில் வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. போதைப்பொருள் சந்தேக நபர்களில் 9 பேருக்கு எதிராக தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களிடம் […]

இலங்கை

நடுக்கடலில் இரண்டாக உடைந்த படகு

இயந்திரம் இன்றி இரண்டாக உடைந்த நிலையில் படகு ஒன்று நேற்று (11) மீட்கப்பட்டுள்ளது. குறித்த படகு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. குறித்த படகானது கடற்கரையில் நங்கூரம் இட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இரண்டாக உடைந்து இயந்திரமும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளது. இவ்வாறு உடைந்து குறித்த கடற் பகுதியில் காணப்பட்ட எஞ்சிய படகு பகுதிகள் கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுத்து வரப்பட்டன. குறித்த கடல் […]