விளையாட்டு

பதிலடி கொடுத்தது நியூசிலாந்து: 20 ஆம் திகதி 3ஆவது போட்டி!

  • March 18, 2026
  • 0 Comments

தென்னாபிரிக்கா South Africa மற்றும் நியூசிலாந்து New Zealand அணிகளுக்கிடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றது. 2 ஆவது போட்டி ஹாமில்டன் மைதானத்தில் […]

இலங்கை செய்தி

“பைபிள் விவகாரம்” – பொலிஸ் அதிகாரிக்கு திருநீறு பட்டை போட்டது சிவசேனை!

  • March 18, 2026
  • 0 Comments

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபையொன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாடு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்தார் எனக்கூறி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி திருநீறு அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் சிவசேனை அமைப்பை சேர்ந்தவர். வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனமொன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில், பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

  • March 18, 2026
  • 0 Comments

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய ஒப்பந்தம் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டது. தொகுதிப் பங்கீடு இறுதிபடுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.வீரபாண்டியன், “கடந்த முறையைவிட இத்தேர்தலில் எங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்று திமுகவிடம் கோரினோம். ஆனால் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரியண்ணன் மனப்பாண்மையில் திமுக […]

இந்தியா தமிழ்நாடு

அதிரும் தமிழக அரசியல் களம்: விஜய் தனி வழி!

  • March 18, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்தே களமிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இம்முறை நான்குமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க, ம.தி.மு.க. மற்றும் புதிதாக இணைந்துள்ள தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. மறுபுறத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க. மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கைகோர்த்திருக்கின்றன. வழக்கம் போல் தேர்தலில் தனித்து நிற்பது என்ற ஒற்றை இலக்குடன் சீமான் களத்தில் உள்ளார். இந்நிலையிலேயே […]

இலங்கை

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 18, 2026
  • 0 Comments

விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலிலிருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்- நுழைவு விசாக்கள் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படவுள்ளது. இதேவேளை, இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

உலகம்

உலக உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்

  • March 18, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்குமானால், உலகளவில் மேலும் 45 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் பட்டினிக்கு முகம் கொடுக்க நேரிடும் என உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. தற்போது உலகளவில் 319 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் Carl Skau தெரிவித்துள்ளார். இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: தமிழரசுக் கட்சியின் முடிவால் எதிரணிக்குள் குழப்பம்!

  • March 18, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி ITAK தீர்மானித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சாணக்கியன் Chanakyan தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பிரதான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மீதான நிலக்கரி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை போதுமான […]

இலங்கை

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நன்கொடை!

  • March 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். இந்த 10 ஹெலிகொப்டர்களும் கடந்த மார்ச் 15ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள போர்ட் மொபைல் துறைமுகத்திலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்பட்டு எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஹெலிகொப்டர்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தூதுவர் மஹிந்த சமரசிங்க, […]

இலங்கை

11 ஆண்டுகளுக்குப் பின் கொழும்பு வரும் British Airways!

  • March 18, 2026
  • 0 Comments

British Airways நிறுவனம் தனது 2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, லண்டன் Gatwick மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு British Airways நிறுவனம் இலங்கைக்கு வழங்கும் முதல் நேரடிச் சேவை இதுவாகும். ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் லண்டன் Gatwick விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்துக்கு மூன்று முறை நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். இதற்கான பயணச் சீட்டு விற்பனை நேற்று […]

உலகம்

UAEமீது ஈரான் தாக்குதல்: ஆஸ்திரேலிய படைத் தளம் சேதம்!

  • March 18, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தில் UAE உள்ள அல் மின்ஹாத் விமான தளத்தின் Al Minhad Air Base மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலை அடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆஸ்திரேலிய ராணுவத்தின் மருத்துவ மற்றும் தங்கும் வசதிகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும்,அ முகாமிட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய படையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார். இந்தத் தளம் ஆஸ்திரேலியாவின் முக்கியப் பயிற்சி மற்றும் […]